இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க! டீ, காபி குடிக்கும் காசு தான்.. 250 ரூபாயில் லட்சதிபதியாக்கும் பிபிஎஃப்
சென்னை: சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் சிறிய தொகையை சேமிப்பாக வைக்கும் போது பிற்காலத்தில் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். தனியார் நிறுவனங்கள் பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களின் நம்பிக்கையான, பாதுகாப்பான சேமிப்பு மையமாக தபால் நிலைய சேமிப்பு கருதப்படுகிறது. இந்த நிலையில் மிக குறைந்த அளவு சேமிப்பில் அதிக லாபம் பெறும் தபால் நிலைய சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்..
இன்றைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது மிக முக்கியம். தினசரி வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால பாதுகாப்பு மற்றும் ஓய்வு கால வாழ்க்கையை அமைதியாக நடத்த வேண்டுமெனில் சரியான முதலீடு அவசியம்.
அதற்காக வங்கிகள் மட்டுமல்லாமல் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களும் பலரின் முக்கிய தேர்வாக மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் அரசு உத்தரவாதமும், நிலையான வட்டியையும் தருவதால் தான் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தபால் நிலைய சேமிப்பு
இந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இருக்கிறது. குறைந்த தொகையிலேயே துவங்கி, நீண்ட காலத்தில் பெரிய தொகையை கையிலே தரக் கூடிய இந்த திட்டம், பல குடும்பங்களுக்கு நம்பிக்கையான முதலீடாக இருக்கிறது. PPF திட்டத்தில் ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்தாலே கணக்கு வைத்திருக்கலாம். அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். தற்போது இதில் 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
பிபிஎஃப் திட்டம்
இதன் மிக பெரிய பலனாக வருமான வரியிலிருந்து தளர்வு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த திட்டம் எப்படி லட்சாதிபதியாக மாற்றும் என்று பார்ப்போம். ஒருவர் தினமும் ரூ.250 சேமித்தால், மாதத்திற்கு ரூ.7,500 சேமிக்க முடியும். இதனால் ஆண்டு முழுவதும் சேமிக்கப்படும் தொகை ரூ.90,000 ஆகும். இதேபோல் 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக சேமித்தால் மொத்த முதலீடு ரூ.13,50,000 ஆகும். ஆனால் அதன் முடிவில் கிடைக்கும் தொகை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். 7.1% வட்டி சேர்ந்து ரூ.24,40,926 வரை முதிர்வுத் தொகை கிடைக்கும். அதாவது முதலீட்டு தொகையையும், வட்டியையும் சேர்த்து, ஒரு சாதாரண மாதச் சம்பளம் பெறுபவர் 24 லட்சத்திற்கும் மேல் லாபம் பெறலாம்.
வரித்தள்ளுபடி திட்டம்
இந்த திட்டத்தில் தேவைப்பட்டால் கடன் பெறும் வசதியும் உள்ளது. வங்கி கடன்களை விட குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதால், இது பலருக்கு நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும்.
நாள்தோறும் ரூ.250 என்பது இன்றைய சூழலில் பெரிய தொகை அல்ல. காப்பி, டீ, சிறிய செலவுகளை கட்டுப்படுத்தி இந்த தொகையை சேமிக்க முடிந்தால், குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். இந்த திட்டம் அரசு உத்தரவாதத்துடன் இருப்பதால் அபாயம் இல்லை.
எதிர்கால நிதி திட்டம்
அதனால் மாணவர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழிலாளர்கள் என அனைவருக்கும் சரியான சேமிப்பு வழியாக இது விளங்குகிறது. இப்போது முதலீடு செய்த தொடங்கினால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் லட்சாதிபதியாக மாறுவது கனவாக அல்லாமல் நனவாகவே இருக்கும். சிறிய சேமிப்பே பெரிய அடித்தளத்தை அமைக்கும் என்பதற்கு பிபிஎஃப் தான் சிறந்த உதாரணம் என்கின்றனர் முதலீட்டு ஆலோசகர்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications