Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலின் ஸ்மார்ட் மூவ்! விஜய், அதிமுகவிற்கு.. ஒரே நேரத்தில் இடியாக போன செய்தி! எல்லா வேலையும் போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் எம்பி மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்த போஸ்ட் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த போஸ்ட் காரணமாக பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படாது என்றாலும் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு, அந்த கட்சிகளை சார்ந்து கருத்துக்களை சொன்ன அரசியல் விமர்சகர்களுக்கு இந்த போஸ்ட் பெரிய செக் மேட்டாக வைக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கடற்கரையில் சைக்கிள் ஓட்டினார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிய வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

mk stalin us visit mk stalin rahul gandhi

சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை, "மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வித்திடும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. தமிழ் நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து.. தமிழ்நாட்டில் இதேபோல் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

ராகுல் காந்தி ட்வீட்: அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி, "சகோதரரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்" என கேட்டிருந்தார்.

அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வாருங்கள், நாம் இருவரும் ஒன்றாக சவாரி செய்து சென்னையின் இதயத்தை ஆராய்வோம்.. நான் உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் இன்னும் நிலுவையில் உள்ளது. நாம் சைக்கிள் சவாரி செய்த பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை சுவைப்போம்" என பதிலுக்கு கூறி உள்ளார்.

அதிமுக - விஜய்: இதன் மூலம் அதிமுக - நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இரண்டிற்கும் ஒரே நேரத்திற்கு ராகுல் காந்தி மெசேஜ் அனுப்பி உள்ளார். காங்கிரசை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அதிமுக தீவிரமாக முயன்று வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டது, இதில் திமுக பாஜகவினர் நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் கவனம் பெற்றுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர். பாஜக இப்படி திமுகவுடன் நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் தயவை பாஜக நாடுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேபோல் ஆளுநர் டீ பார்ட்டிக்கு போனது தொடங்கி பல விஷயங்கள் விவாதம் ஆனது. இதை பயன்படுத்தி காங்கிரசை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அதிமுக தீவிரமாக முயன்று வந்தது. எப்படியாவது திமுக கூட்டணியை உடைத்து காங்கிரசை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இன்னொரு பக்கம் நடிகர் விஜயும் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர்களை அழைக்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு பேருக்கும் நோ சொல்லும் விதமாக ஸ்டாலினுடன் இருக்கும் சகோதரத்துவத்தை ராகுல் காந்தி வெளிக்காட்டி.. இரண்டு தரப்பிற்கும் செக் வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+