சென்னையில் 1 லட்சம் வீடுகளுக்கு ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள்.. கட்டணம் யாருக்கு மாறும்.. விவரம்
சென்னை: சென்னை நகர மக்களுக்கு பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்தும், மற்றும் கடல் நீரை குடிநீரை மாற்றும் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னையில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 2,400 சதுரடிக்கு மேல்பரப்பளவுள்ள 1 லட்சம் வீடுகளுக்கு ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள் பொருத்தும் பணி விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்றப்படி கட்டணம் நிர்ணயிக்கபட உள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புறநகரையும் சேர்த்தால் சுமார் 1.2 கோடியாக மக்கள் தொகை இருக்கிறது. சென்னை மாநகருக்குள் மட்டும்.. அதாவது மாநகராட்சியின் பரப்பளவிற்குள் மட்டுமே 70 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மிக குறுகிய அளவு நிலப்பரப்பிலேயே இவ்வளவு பேர் வசிக்கிறார்கள். இவ்வளவு அடர்த்தியான மக்கள் தொகை காரணமா குடிநீர் மேலாண்மை என்பது ஒவ்வொரு நாளும் சவாலான பணியாகவே சென்னை மாநகராட்சிக்கு இருக்கிறது.

8 லட்சம் இணைப்புகள்
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய பிரதான ஏரிகளில் இருந்தும், கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் மூலமும் என மொத்தம் தினமும் சுமார் 1,300 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சென்னை மாநகராட்சியின் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சென்னை மாநகருக்குள் மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு செலவு அதிகம்
சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் இந்த நீரைச் சுத்திகரித்து வீடுகளுக்கு வழங்குவதில் வாரியத்திற்குக் கடுமையான செலவுகளை சந்திக்கிறது. உதாரணமாக, ஏரி நீரைச் சுத்திகரித்து வழங்க ஆயிரம் லிட்டருக்கு சுமார் ரூ.8 செலவாகிறது. ஆனால், கடல் நீரை குடிநீராக்க 1,000 லிட்டருக்கு சுமார் ரூ.47 வரை சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் செலவிடுகிறது.
குடிநீர் கட்டணம் மிக குறைவு
ஆனால், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணமோ மிகக் குறைந்த நிலையான தொகையாக இன்று வரை இருக்கிறது.. சென்னை மாநகராட்சி விதிகளின் படி, சாதாரண வீடுகள் மாதத்திற்கு ரூ.105, அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.200 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட தினமும் குடிநீர் வராது. மற்ற ஊர்களில் எல்லாம் வாரம் இருமுறை, வாரம் ஒருமுறை தான் குடிநீர் வரும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை.. தினமும் குடிநீர் வரும்.
ஸ்மார்ட் மீட்டர் அறிமுகம்
இதன் முதல் கட்டமாக, குடிநீர் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்த வாரியம் முடிவு செய்திருக்கிறது., அதற்கான டெண்டர் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. முதல்கட்டமாக சுமார் 1 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 2,400 சதுரடிக்கு மேல்பரப்பளவுள்ள பெரிய வீடுகளுக்கு மட்டும் நிறுவப்பட இருக்கிறது. இந்தச் சோதனை முயற்சிக்குப் பிறகு, மீதமுள்ள அனைத்து இணைப்புகளிலும் படிப்படியாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பொதுமக்கள் தங்கள் குடிநீர் பயன்பாட்டைக் குறைத்து, நீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள் எனச் சென்னை குடிநீர் வாரியம் நம்புகிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications