உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல்.. விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரன்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரன்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருந்த போது, நடிகர் சரத்குமார் துணை தலைவராக இருந்தார். அப்போதில் இருந்தே இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்த நிலையில் தற்போது சரத்குமார், விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று சரத்குமார் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக எப்போது வேண்டுமானலும் இணையலாம் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் சரத்குமார் விஜயகாந்தை சென்று நேரில் சந்தித்து இருக்கிறார். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் - சரத்குமார் இருவரும் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம்தான் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications