Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை- பெங்களூர் டபுள் டக்கர் ரயிலில் இருந்து கிளம்பிய புகை.. நடு வழியில் நிறுத்தம்.. பயணிகள் பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - பெங்களூர் இடையே இயக்கப்படும் டபுள் டக்கர் ஏசி ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதனால் வேலூர் குடியாத்தம் அருகே நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் பெரும் அச்சம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழில் வளம் நிறைந்த தென் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களான சென்னை - பெங்களூர் இடையே பணி நிமித்தமாகவும் தொழில் நிமித்தம் உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பேருந்து, ரயில், விமானம் என இரு நகரங்களுக்கு இடையேயான அனைத்து வழித்தடங்களில் கூட்டம் அலை மோதும்.

 Smoke in Chennai - Bangalore Double Tucker train: Passengers panic

அந்த வகையில், ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக செல்வது காணப்படும். சென்னை - பெங்களூர் இடையே ஏசி வசதி கொண்ட டபுள் டக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் டூ பெங்களூர் இடையே செல்லும் இந்த ரயிலில் இன்று வேலூர் குடியாத்தம் அருகே செல்லும் போது திடீரென புகை வெளியேறியது. குபுகுபுவென புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியில் பயணிகள் உறைந்தனர்.

உடனே ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்படவே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர். ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வந்தது தெரியவந்தது. உடனடியாக ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. திடீரென ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாகத்தான் அசாமின் திப்ருகர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென புகை கிளம்பியது. இதனால், அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பயணிகளும் அலறியடித்து ரயில்களில் இருந்து இறங்கினர்.

தண்டவாளத்தில் இருந்த சாக்குப்பை ஒன்று ரயிலின் சக்கரத்தில் பிரேக் பகுதியில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட தேய்மானத்தின் காரணமாகவே புகை வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. அதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் இயக்கப்படும் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்தது.

இதில் ரயிலின் பெட்டிகள் சேதம் அடைந்தன. உரிய நேரத்தில் தீ அணைக்கபட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அண்மையில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த ரயில் விபத்தின் ரணங்கள் மக்கள் மனதில் இன்னும் நீங்காத நிலையில், அடுத்தடுத்து ரயில்களில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+