மரத்தில் 7 அடி நீளம் தொங்கிய பாம்பு.. மண் குடிசையில் அள்ள அள்ள ஆச்சரியம்.. அதென்ன மாட்டு சாணத்தில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் தன்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மரத்தில் என்ன தொங்க விடுகிறார்? என்பதை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. அங்கே கண்ட காட்சி ஒட்டுமொத்த பேரையும் அதிர செய்துவிட்டது. இது தொடர்பான விசாரணையும் அங்கே நடந்து வருகிறது..

ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர், தன்னுடைய வீட்டிலேயே பசுமாடுகளை வளர்த்து வருகிறார்..

Snake Mud Hut 7 Foot tree 7

மண் குடிசை - மாட்டு சாணம்

சம்பவத்தன்று வீட்டின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த மண் குடிசையில், மாட்டு சாணங்களை அகற்ற வந்துள்ளார்.. அப்போது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்சசி அடைந்துள்ளார்..

சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பாம்பை அகற்ற முயன்றபோதுதான், அடுத்தடுத்த பாம்புகள் உள்ளிருந்து வெளியே வர துவங்கிவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் விவசாயி..

அள்ள அள்ள பாம்புகள்

இதனால் ஒவ்வொரு பாம்பாக வெளியே எடுத்து போட்டார்.. மொத்தம் 10 பாம்புகள் ஒரே இடத்தில் மறைந்திருந்தன.. அனைத்து பாம்புகளையும் வெளியே எடுத்து, அவற்றை அதே இடத்தில் வைத்து கொன்றுவிட்டார் விவசாயி.. பிறகு, அந்த பாம்புகளை வீட்டுக்கு அருகிலுள்ள புன்ஹானா-ஹோடல் சாலையோர மரத்தில் ஒவ்வொன்றாக தொங்கவிட்டார்..

அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் ஏதோ தொங்கி கொண்டிருப்பதாக நினைத்தனர். உற்றுப்பார்த்தபோதுதான், அத்தனையும் செத்துப்போன பாம்புகள் என்பது தெரியவந்ததால், வெலவெலத்து போனார்கள்.. இந்த தகவல் சுற்றுவட்டார பகுதி முழுவதுமே தெரிந்துவிட்டதால், மொத்த பேரும் திரண்டு வந்துவிட்டார்கள்.. மரத்தை சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர்..

7 அடி நீளம் மரத்தில் தொங்கி பாம்பு

அதற்குள் இந்த தகவல் பிக்சோர் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. வனத்துறையினருக்கும் தகவல் தந்து வரவழைத்து, மரத்தில் தொங்கி கொண்டிருந்த பாம்புகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பிக்சோர் காவல் நிலைய அதிகாரி ஜஸ்வீர் சிங் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கொல்லப்பட்ட பாம்புகள் சுமார் ஒரு அடி முதல் 7 அடி வரை நீளமுள்ளன. பாம்புகளை கொல்வதும், அவைகளை பொதுமக்கள் முன்பே இப்படி தொங்க விட்டு காட்சிப்படுத்துவதும் சட்டப்படி குற்றம்.. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.. இதுகுறித்து விசாரணை நடக்கிறது" என்றார்.

சாரைப்பாம்பு - சதீஷ்

இதனிடையே, ஹரியானாவின் புகழ்பெற்ற பாம்பு மீட்பு நிபுணர் சதீஷ் என்பவரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.. 10 பாம்புகள் ஒரே இடத்தில் இருந்த நிலையில், அந்த இடத்தில் வேறு பாம்புகள் இருக்கலாம் என்று, சதீஷை வரவழைத்தனர்..

சதீஷூம், அங்கு பழைய பொருட்களை குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினார்.. அப்போது 2 பாம்புகள் இருந்துள்ளன.. பிறகு மீண்டும் அதே இடத்தில் மேலும் 2 பாம்புகள் இருந்துள்ளன.,. மொத்தம் 4 பாம்புகள் சாரைப்பாம்புகள் ஆகும்.. அந்த 4 பாம்புகளும் பத்திரமாக பிடிக்கப்பட்டு, காட்டுப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது.

பாம்புகள் - அறிவுறுத்தல்

சதீஷ் அங்குள்ள பொதுமக்களிடம் கூறியதாவது, "சாரை பாம்புகள் விவசாயிகளுக்கு நண்பர்களாக இருக்கின்றன. இவர்கள் எலிகளை பிடித்து சாப்பிடுவதால் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் இவர்கள் மெதுவாக நடக்கக்கூடியது.. அதனால் பொதுமக்களுக்கு பெரிய ஆபத்து இல்லை.

ஆனால் வீட்டில் பழைய பொருட்கள், குப்பைகள் சேமித்து வைக்கக்கூடாது.. அடைப்பான இடங்கள், ஈரப்பதம் நிரம்பிய பகுதிகளில் பாம்புகள் அடைக்கலமாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும், பாம்புகளை அடித்து தாக்காமல், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தரவேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

விவசாயியின் மண் குடிசை வீட்டில் 10 பாம்புகளை அடித்து கொன்றதும், மேலும் சாரை பாம்புகள் உயிருடன் பிடிக்கப்பட்டதும், அப்பகுதி மக்களை கதிகலங்க செய்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+