சினேகன்- கனிகா வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால்! ஆஹா மலரும் நினைவுகள் திரும்புதே!
சென்னை: கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் இப்போதும் இருக்கிறதா என மலைத்து போகும் அளவுக்கு சினேகன்- கன்னிகா குடும்பத்தில் நடக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி இருவருமே திரைப்பிரபலங்கள் என்ற போதிலும் சாமானியர்களை போலவே இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பழகுகிறார்கள்.
கவிஞர் சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இடையே 16 வயது வித்தியாசம் என்றார்கள். ஆனால் சினேகனுக்கு தாய்க்கு தாயாகவும் குழந்தைக்கு குழந்தையாகவும் இருப்பது கன்னிகாதான். இவர் கூட்டுக் குடும்பத்தை விரும்புபவர்.

இதற்காக அடிக்கடி சினேகனின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார். அது போல் சொந்தக்காரர்களை சென்னைக்கு வரவழைத்து தன் வீட்டில் தங்க வைத்து அங்கு கணவன் மனைவி தனியாக பிரைவசி இல்லாமல் கூட்டு குடும்ப சந்தோஷத்தை பெற ஒரே ஹாலில் 20 -க்கும் மேற்பட்டோர் படுத்து உறங்கும் காட்சியை அண்மையில் கண்டோம்.
அந்த உறவுகளுடன் சினேகனும் கன்னிகாவும் படுத்து மகிழ்ந்தனர். அன்று ஒரு நாள் இரவு செல்போன்கள் இல்லாமல் குடும்பத்தினர் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டே தூங்கினர். அது போல் இன்னொரு சம்பவத்தை கன்னிகா செய்துள்ளார். அவர் வீட்டில் ஒரே குக்கரில் வைத்த பொங்கலை கூட்டு குடும்பத்தினர் அனைவருக்கும் பரிமாறினார்.
பிறகு ஒரு தட்டில் போட்டுக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஊட்டி மகிழ்ந்தார். பிறகு ஆட்டுக் குட்டியுடன் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடினார். இதைத் தொடர்ந்து புளியம் பழத்தில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து சுவைத்தார். இப்படியாக ஒரு கூட்டுக் குடும்பம் இன்றும் உள்ளதா என தெரியவில்லை. ஆனால் எல்லா நாட்களும் இல்லாவிட்டாலும் சில நாட்களிலாவது இவர்கள் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருந்து உண்மையான மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இது போல் நேரம் கிடைக்கும் போது நாமும் கூட்டுக் குடும்பத்தின் பலன்களை பெற வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு பகிர்ந்து உண்ணுதல், பெரியோரை மதித்து நடத்தல், நேர்மையாகவும் உண்மையாகவும் இருத்தல், தாய், தந்தையரை மதித்தல் உள்ளிட்ட நல்ல குணங்கள் இருந்தன. கூட்டுக் குடும்பங்களில் வளர்ந்த குழந்தைகள் சீக்கிரமே பேசத் தொடங்கினர்.

இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பங்கள் என்ற கலாச்சாரம் 1980- 90 களோடு முடிவடைந்துவிட்டது என சொல்லலாம். ஆங்காங்கே எங்கோ ஒரு சில வீடுகளில் கூட்டுக் குடும்பங்கள் இருப்பதை பார்க்கிறோம். அந்த காலத்தில் பள்ளிக்கு விடுமுறை என்றால் போதும் பாட்டி வீட்டுக்கு வந்துவிடுவோம். அங்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா பெரியம்மா, அம்மா அப்பா, மாமா மாமி, அத்தை மாமா, அவர்களுடைய பிள்ளைகள் என வீடே திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
அதெல்லாம் அழகிய நிலாக்காலம் என சொல்லலாம். இன்றைய நவீன உலகில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் இருப்பதால் இத்தகைய கூட்டு குடும்பங்களை நாம் பார்க்கவே முடிவதில்லை. பள்ளிக்கு விடுமுறை கிடைத்தாலும் தாத்தா பாட்டி வீடுகளுக்கு குழந்தைகள் மட்டுமே செல்ல கூடிய நிலை உள்ளது.
பெற்றோர் வேலைக்கு செல்வதால் அவர்களால் விடுமுறை எடுத்துக் கொண்டு வர இயலாத சூழல் நிலவி வருகிறது. கவிஞர் சினேகனின் குடும்பத்தினரை போல் நாமும் கூட்டுக் குடும்பங்களின் மகிழ்ச்சியை ஒரு நாளாவது அடைய வேண்டும். சோற்றை உருண்டைகளாக்கி, பாட்டி எல்லாருக்கும் ஒரு உருண்டை கொடுக்க அதை சாப்பிடும் போது ருசியே தனி ருசியாகும்.












Click it and Unblock the Notifications