சாதாரண சேமிப்பு கணக்கில் இவ்வளவு லாபமா? வங்கிகள் சொல்லாத ஆட்டோ ஸ்வீப் லாப ரகசியமும் அதன் நன்மைகளும்
சென்னை: நிறைய பேர் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பார்கள்.. ஆனால் அந்த கணக்கிலேயே கூட நல்ல அளவு வட்டி கிடைக்கலாம் என்பது பலருக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தங்கள் உழைப்பில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.. இதனால் தற்போது எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்தால் அதிக வட்டி கிடைக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
பொதுவாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மற்றும் பெரிய தனியார் வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை மட்டுமே வட்டி வழங்குகின்றன..

பாரத ஸ்டேட் வங்கி
உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கி போன்ற பெரிய வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும்.. ஆனால் கடந்த சில வருடங்களாக வங்கி துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக சில குட்டி குட்டி நிதி வங்கிகள் தங்களது கஸ்டமர்களை ஈர்க்க அதிக வட்டி வழங்க ஆரம்பித்துள்ளன..
குறிப்பாக ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் போன்ற வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு 6 சதவீதம் முதல் 7 சதவீதத்திற்கும் மேல் வரை கூட வட்டி வழங்குகின்றன என்று கூறப்படுகிறது.. இதனால் இப்போது நிறைய பேர் இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சேமிப்பு கணக்கு வட்டி
ஆனால் அதிக வட்டி கிடைக்கும் என்ற காரணத்தால் உடனே எந்த வங்கியிலும் கணக்கு தொடங்குவது சரியான முடிவு அல்ல.. ஏனெனில் சில பேங்குகளில் வட்டி விகிதம் கணக்கில் வைத்திருக்கும் பணத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும்.. உதாரணமாக 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருப்பு வைத்திருந்தால் ஒரு வட்டி.. அதற்கு மேல் இருப்பு வைத்திருந்தால் அதிக வட்டி என்ற முறையில் அடுக்கு முறை வட்டி இருக்கும்..
அதுமட்டுமல்ல, பேங்க்குகளை தேர்வு செய்யும் போது அந்த வங்கியின் நம்பகத்தன்மை, சேவை வசதிகள், ஆன்லைன் பரிவர்த்தனை வசதி போன்றவற்றையும் உற்று கவனிக்க வேண்டும்..
வங்கியில் அதிக லாபம்
அதேபோல் இந்திய டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் விதிகளின்படி ஒரு வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதும் மிக முக்கியமான விஷயமாகும்.
சேமிப்பு கணக்கில் வட்டி பொதுவாக தினசரி இருப்பின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கில் சேர்க்கப்படும்.. மேலும் ஒரு ஆண்டில் வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டினால் அதற்கு வருமான வரி விதிக்கப்படும் என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..
வெறும் வங்கி கணக்கு என்று மட்டுமே அனைத்தையும் எடுத்து கொள்ள முடியாது.. காரணம், சிறியதாக தோன்றும் சேமிப்பு கணக்கே காலப்போக்கில் நல்ல வருமானத்தை மக்களுக்கு தரக்கூடியதாக மாறலாம்.. அதனால் வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து சரியான சேமிப்பு கணக்கைத் தேர்வு செய்வது உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும் வளர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்..!!












Click it and Unblock the Notifications