பூண்டு கிட்ட மட்டும் போயிடாதீங்க சார்.. 500 ரூபாய் தாண்டிருச்சாமே! வேதனையை கிளப்பும் வெங்காயம்!
சென்னை: வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அளிக்கும் விதமாக பூண்டு விலை 450 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்த மழை அளவு இல்லை.

இதனால் பகல் நேரங்களில் கோடை வெப்பத்தை விட வெயில் அதிகமாகவே இருந்தது, காலை முதல் இரவு வரை வெப்பம் கொளுத்தி எடுத்த நிலையில் சில நிமிடங்கள் கூட மழை பெய்யல்லை. அப்படியே பெய்தாலும் புழுக்கம் காரணமாக மக்கள் கடும் அவதியை சந்தித்தனர். இதனால் அப்போது விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாயினர்.
அந்த குறையை போக்கும் வகையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் நீர் நிலைகளில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்கள், வெங்காயம் உள்ளிட்டவை அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவற்றை பறித்து விற்றாலும், கூலிக்கு கூட பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, வாழை உள்ளிட்ட உணவு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் கடும் இன்னலை சந்திக்கின்றனர்.
இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால் பொதுமக்களும் சிரமமடைந்துள்ளனர்.
வழக்கமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. மேலும் வெயில் மற்றும் மழை என மாறி மாறி வருவதால் வெங்காயம் அழுகி விடுகின்றன. இந்த நிலையில் தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் உள்ளிட்ட பல காய்கறிகள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. பூண்டு விலை அதிர வைக்கும் விதமாக 500 ரூபாயை தொட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் சில்லறை விற்பனையில் 500 ரூபாயை தாண்டி விற்பனையாவதாகக் கூறப்படுகிறது. இதோ போல ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. வெளிச்சந்தையில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
அதிகபட்சமாக கடந்த சில நாட்களாக 30 முதல் 60 ரூபாய் வரை விற்பனையான சின்ன வெங்காயம், இன்று 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் இதன் விலை தரத்தை பொறுத்து 120 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஒரு கிலோ கேரட் 100 ரூபாய்க்கும், இஞ்சி 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 120க்கும். உருளைக்கிழங்கு 80 ரூபாய்க்கும், விற்பனையாகிறது. கத்தரிக்காய் 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications