சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்!!

Google Oneindia Tamil News

சென்னை: ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரைவிட (உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள்) தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆப் மதிப்பெண் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக இடஒதுக்கீடு என்பது எந்த வகையிலும் குறைந்தது கிடையாது என்று திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''யுபிஎஸ்சி முக்கிய தேர்வில் கட் ஆப் ஓபிசிக்கு 718, எஸ்டிக்கு 699, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு 696 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக நேர்காணல் கட் ஆப் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு 909, ஆனால், ஓபிசிக்கு பிரிவினருக்கு 925, எஸ்சிக்கு 898, எஸ்டிக்கு 893 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Social injustice has been done to SC, MBC in Civil Service exam conducted by UPSC says MK Stalin

சமூக இடஒதுக்கீடு என்பது எந்த வகையிலும் குறைந்தது கிடையாது. உண்மையில் அவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினரைவிட நன்றாகவே தேர்வுகளை எழுதுபவர்கள்'' என்று திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.

Social injustice has been done to SC, MBC in Civil Service exam conducted by UPSC says MK Stalin

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த கட் ஆப் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முதன் முறையாக இந்த சமூக அநீதியை கனிமொழிதான் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இன்று திமுக தலைவர் முக ஸ்டாலினும் இதே குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக தவறை திருத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில் அடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்

English summary
Social injustice has been done to SC, MBC in Civil Service exam conducted by UPSC says MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X