கிடைத்த கேப்பில் எல்லாம்! புதுமைப்பெண் திட்டத்திலும் பாஜகவிற்கு ஸ்டாலின் தந்த மெசேஜ்! பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் இன்று மேடையில் நடந்த நிகழ்வு ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆசிரியர் தினத்தை தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில் இன்று திட்டத்தின் பயனாளிகளுக்கு மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் முதல் மாதத்திற்கான செக்கை கொடுத்தார். மாணவிகள் சிலருக்கு இதற்கான செக் வழங்கப்பட்டது. வெவ்வேறு அரசு பள்ளிகளில் இருந்து 6 - 12 வகுப்பு படிக்கும் மாணவிகளில் பலர் இதற்காக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு வரிசையாக செக் வழங்கப்பட்டது. முதலில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் செக் கொடுத்தார்.

மாணவி

மாணவி

அதன்பின் இந்து மாணவி ஒருவருக்கு செக் தரப்பட்டது . வரிசையாக இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என்று பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவிகள் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் செக் வாங்கினார்கள். இந்த சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை மேடை ஏற்றியது ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருக்கிறது.

ஸ்டேட்மென்ட்

ஸ்டேட்மென்ட்

அங்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வர கூடாது என்று இந்துத்துவா மாணவ, மாணவியர்கள் போராட்டம் செய்து வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு தற்போது அங்கு கோர்ட்டும் தடை விதித்து உள்ளது. இது உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஹிஜாப் அணிந்த மாணவிகளை மேடை ஏற்றி உள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு அனுப்பிய "சமூக நீதி" மெசேஜ் இது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

போராட்டம்

போராட்டம்

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் இப்படித்தான் நடந்தது. அப்போது மேடையில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதை பாடுவதற்கு ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகள் நின்று இருந்தனர். கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் சென்று கொண்டு இருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் ஹிஜாப் அணிந்த மாணவிகளை மேடையில் ஏற்றி கவனம் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+