சமூக நீதியில் தமிழ்நாடுதான் டாப்.. ஒப்புக்கொண்ட மத்திய அரசு! வெளியான முக்கிய டேட்டா!
சென்னை: சமூக நீதி விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு, தமிழ்நாடுதான் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில், இது மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் SC, ST, OBC பிரிவினர் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்திருக்கிறார். மொத்தமுள்ள 1,234 நீதிபதிகளில் 1,205 (97.65%) பேர் இந்த 3 பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

- SC 20.66% (255)
- ST 1.21% (15)
- OBC 75.76% (935)
நாடு முழுவதும் நிலை என்ன?
என தமிழ்நாட்டில் நீதிபதிகள் இருக்கின்றனர். நாட்டின் கீழமை நீதிமன்ற நீதிபதிகளில் 14.15% தலித்கள், 5.12% பழங்குடியினர் மற்றும் 26.64% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர். இந்த விவரங்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால், ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ் கே. ஜா எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
உயர் நீதிமன்றங்களை ஒப்பிடுகையில், கீழமை நீதிமன்றங்களில் சமூகப் பிரதிநிதித்துவம் சிறப்பாக உள்ளது. 2018-ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கப்பட்ட 847 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், வெறும் 3.89% பேர் தலித்கள், 2% பேர் பழங்குடியினர் மற்றும் 12.27% பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கும் குறைவான பிரதிநிதித்துவம்
ஜனவரி 21 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 20,833 நீதிபதிகளில் 9,534 பேர் (45.76%) எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில், 2,949 (14.15%) பேர் தலித்கள், 1,068 (5.12%) பேர் பழங்குடியினர் மற்றும் 5,517 (26.64%) பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
தமிழ்நாட்டின் நிலை
பெரிய மாநிலங்களில், தமிழ்நாட்டில் இந்த சமூகப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் மிக அதிகமாக உள்ளது. இங்கு மொத்தம் 1,234 நீதிபதிகளில் 1,205 பேர் (97.65%) எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினராவர். இதில் 255 (20.66%) தலித்கள், 15 (1.21%) பழங்குடியினர் மற்றும் 935 (75.76%) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள்.
தென் மாநிலங்களில் என்ன நிலை?
கர்நாடகாவிலும் சிறப்பான பிரதிநிதித்துவம் காணப்படுகிறது. 1,129 மாவட்ட மற்றும் சார்நிலைப் நீதிமன்ற நீதிபதிகளில் 996 பேர் (88.82%) மேற்கண்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 226 தலித் நீதிபதிகள் (20.01%), 47 பழங்குடியினர் (4.16%), 733 இதர பிற்படுத்தப்பட்டோர் (64.92%) ஆவர்.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா போன்ற பிற தென் மாநிலங்களும் கீழமை நீதிமன்றங்களில் நல்ல பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. கேரளாவில் 50.60% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 7.45% தலித்கள் மற்றும் 0.69% பழங்குடியினர் நீதிபதிகளாக உள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் முறையே 38.98% (ஓ.பி.சி.), 18.88% (எஸ்.சி.), 5.59% (எஸ்.டி.) ஆகவும், தெலங்கானாவில் 44.71% (ஓ.பி.சி.), 15.28% (எஸ்.சி.), 8.98% (எஸ்.டி.) ஆகவும் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் என்ன நிலை?
உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கீழமை நீதிமன்றங்களில் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதித்துவம் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 2,640 நீதிபதிகளில் 1,414 பேர் (53.56%) மூன்று சமூகங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 534 (20.22%) தலித்கள், 38 (1.43%) பழங்குடியினர் மற்றும் 842 (31.89%) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர்.
பீகாரில் 253 (20.01%) தலித் நீதிபதிகள் உள்ளனர். மேலும் 14 (0.84%) பழங்குடியினரும், 479 (28.76%) இதர பிற்படுத்தப்பட்டவர்களும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, பீகாரில் 1,665 நீதிபதிகளில் 746 பேர் (44.8%) எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
பூஜ்யமாக உள்ள மாநிலங்கள்
மகாராஷ்டிராவில் தலித் நீதிபதிகள் 11.70%, பழங்குடியினர் 0.36%, இதர பிற்படுத்தப்பட்டோர் 25.77% என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் முறையே 16.04% (தலித்), 14.15% (பழங்குடியினர்), 18.79% (பிற்படுத்தப்பட்டோர்) நீதிபதிகளாக உள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் விதமாக, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் 'பூஜ்யம்' என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுகின்றனர். அதே சமயம், மாநில நீதிபதிகளின் நியமன விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகளே உருவாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications