மதுரைக்கு போகாதடி vs வந்தாய் ஐயா வந்தாய் ஐயா.. மோடி வருகையால் போர்க்களமான டிவிட்டர்.. வைரல்!
சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக டிவிட்டரில் #GoBackModi என்ற டேக் எப்போதும் போல் வைரலாகி வருகிறது. அதே சமயம் மோடிக்கு வருகையை ஆதரித்து #TNWelcomesModi டேக் வைரலாகி வருகிறது. இது டிவிட்டரே பெரிய போர்க்களமாக இருக்கிறது.
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். காலை 11 மணிக்கு மோடி மதுரை வருகிறார்.
இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது.

கோபேக் மோடி டிரெண்ட்
எப்போதும் போல இந்த முறையும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகத்தில் நிறைய போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி இன்றுதான் தமிழகம் வருகிறார். ஆனால் நேற்றே #GoBackModi டேக் டிரெண்டாக தொடங்கிவிட்டது. நேற்றே #GoBackModi டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இப்போதுவரை இது முதலிடத்தில் இருக்கிறது.

இன்னொரு பதிலடி
இதற்கு பதிலடியாக பாஜக ஆதரவாளர்கள் #TNWelcomesModi என்றும் டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடியை தமிழகம் வரவேற்பதாக இவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள். இது ஆச்சர்யமாக இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.

போர் ஆமாம் போர்
இதேபோல் #GoBackSadistModi என்று மோடிக்கு எதிராகவும், #MaduraiThanksModi என்று மோடிக்கு ஆதரவாகவும் இன்னும் சில டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. இரண்டு தரப்பினரும் மாறி மாறி டிவிட்டரில் போஸ்ட் செய்து இந்திய அளவில் வைரலாக சண்டையிட்டு வருகிறார்கள்.
|
பெரிய சந்தோசம்
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை வரவேற்பதில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சையாக இருக்கிறது என்று பாஜக ஆதரவாளர் டிவிட் செய்து இருக்கிறார்.
|
மதுரைக்கு வந்தாய் ஐயா
அந்த வகையில் பிரதமர் மோடிக்காக பாகுபலி படத்தின் பாடலை எல்லாம் வைத்து எடிட் செய்து நிறைய வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். பாஜக இளைஞரணியின் தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்காக வீடியோ எடிட் செய்து ஷேர் செய்து இருக்கிறார்... வந்தாய் ஐயா.. வந்தாய் ஐயா!
|
மதுரைக்கு போகாதடி
ஒரு பக்கம் மதுரைக்கு வந்தாய் ஐயா என்று பாஜகவினர் பாட்டு போட்டு டிரெண்ட் செய்கையில் இன்னொரு பக்கம் பாஜக எதிர்ப்பாளர்கள் ''மதுரைக்கு போகதடி'' என்று ''எச பாட்டு'' பாடி மோடிக்கு எதிராக #GoBackModi டேக்கை வைரல் செய்து வருகிறார்கள்.
|
வாங்க வாங்க
பிரதமர் மோடியை மதுரைக்கு வரவேற்கிறேன். பிரதமர் மோடி மதுரையில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தமிழர்களின் கலை அடையாளமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்து அவரை வரவேற்று இருக்கிறார்.
|
இவர்கள்தான் தமிழர்கள்
மொத்த இந்தியாவும் தமிழர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். எப்படி ஒரு விஷயத்தை அணுக வேண்டும், எப்படி ஒன்றை டிரெண்ட் செய்ய வேண்டும் என்பதை என்று இவர் கூறியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications