அனைவருக்கும் சமமான நிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேறும் - பிரதமர் மோடி
சென்னை: பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினர் அவரது நோக்கத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார் என்று சென்னை ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தந்தார். இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு சென்றார்.

விவேகானந்தர் இல்லத்தில் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு விவேகானந்தர் சிலை பரிசு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-
சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் நேசிக்கிறேன். விவேகானந்தர் மீதான தாக்கம் தமிழகத்தில் அதிகம் உள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்ச்சியோடு தான் ராமகிருஷ்ண மடமும் செயல்படுகிறது. அனைவருக்கும் சமமான நிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேறும்
பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். அவரது நோக்கத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். தங்கள் மீதான தடைகளை பெண்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர். விவேகானந்தர் வலியுறுத்திய பெண்கள் முன்னேற்றத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்ற இடம் தமிழகம். இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை கொண்டிருந்தார் விவேகானந்தர்" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications
