முழு சூரிய கிரகணம்: வானில் அதிசயம் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும்
சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி தென் அமெரிக்கா நேரப்படி மாலை 4 மணி 13 நிமிடம் 28 நொடி வரை நீடிக்கிறது. இந்திய நேரப்படி அது இரவு 09 மணி 43 நிமிடம் 28 நொடியாகும். கிரகணம் அப்போது முழு உச்சத்தில் இருக்கும்.
சென்னை: 2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ உள்ளது. தென் அமெரிக்கா நேரப்படி மாலை 4 மணி 13 நிமிடம் 28 நொடி வரை நீடிக்கிறது. இந்திய நேரப்படி அது இரவு 09 மணி 43 நிமிடம் 28 நொடியாகும். கிரகணம் அப்போது முழு உச்சத்தில் இருக்கும். எந்த நேரத்தில் கிரகணம் தொடங்கி எப்போது முடியும் என்று பார்க்கலாம்.
அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜூன் 21ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது.

டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்கா நேரப்படி பகல் 1 மணி 33 நிமிடம் 55 நொடிக்கு தொடங்குகிறது. இது இந்திய நேரத்திற்கு இரவு 07 மணி 03 நிமிடம் 55 நொடியாகும்.
படிப்படியாக கிரகணம் நீடித்து முழு சூரிய கிரகணத்தை தென் அமெரிக்க நாடுகளில் பகல் 02 மணி 32 நிமிடம் 34 நொடியில் பார்க்கலாம். இது இந்திய நேரப்படி இரவு 08 மணி 02 நிமிடம் 34 நொடியாகும்.
இந்த முழு சூரிய கிரகணம் மாலை 4 மணி 13 நிமிடம் 28 நொடி வரை நீடிக்கிறது. இந்திய நேரப்படி அது இரவு 09 மணி 43 நிமிடம் 28 நொடியாகும். கிரகணம் அப்போது முழு உச்சத்தில் இருக்கும்.
முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவில் மாலை 05 மணி 54 நிமிடம் 18 நொடிக்கு முடிவடைகிறது. இது இந்திய நேரப்படி இரவு 11 மணி 24 நிமிடம் 18 நொடியாகும். கிட்டத்தட்ட நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக சூரிய கிரகணம் நீடிக்கிறது. படிப்படியாக கிரகணம் தென் அமெரிக்காவில் 06 மணி 53 நிமிடம் 03 நொடியில் முடிகிறது. இந்திய நேரப்படி டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு 23 நிமிடமாகும்.
தென்அமெரிக்காவில் பகல் நேரத்தில் நிகழ்வதால் அங்குள்ளவர்கள் தெளிவாக பார்க்க முடியும். இந்திய நேரப்படி அது இரவு நேரம் என்பதால் நம்மால் கிரகணத்தை பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications
