சூரிய கிரகணம்.. அக்.14ல் நெருப்பு வளையம்.. வான வேடிக்கையை இந்தியாவில் பார்க்க முடியுமா?
சென்னை: அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை நாளான மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பின்னர் 15 நாட்கள் கழித்து அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த மாதத்தில் நிகழும் சூரிய சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியுமா? எந்த நேரத்தில் பார்ப்பது என்று நாசா இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். எல்லா அமாவாசை நாட்களிலும் கிரகணம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பூமியை பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது. அதேபோல், சூரிய கிரகணம் நிகழ்ந்து சரியாக 15 நாட்களில் சந்திர கிரகணம் நிகழும்.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது.
அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை நாளான மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. அதனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியிலிருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. முழுமையான சூரியனை மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும். இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
அதே நேரத்தில் நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பூமியில் உள்ள எந்த ஒரு இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை நீங்கள் பார்த்தால், உங்கள் கண்களை சேதப்படுத்தலாம். ஏனென்றால், சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு உங்கள் விழித்திரையை சேதமாக்கி பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வளைய கிரகணத்தின் உச்ச நேரத்தில் கூட சூரியனை நேரடியாகப் பார்க்காதீர்கள் என்றும் நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக 15 நாட்கள் கழித்து அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. அதனால் இந்த கிரகணம் இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் அக்டோபர் 2, 2024 அன்று நிகழும். அப்போது பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இருந்து நெருப்பு வளையம் தெரியும்.
ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் குடிக்கக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications