சென்னையில் பார்க்கிங் பிரச்சினையே வராது.. வருது செம திட்டம்.. ஆப்பில் புக் செய்து காரை நிறுத்தலாம்
சென்னை: சென்னையில் கார்களில் செல்பவர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பார்க்கிங் செய்ய இடம் கிடைக்காமல் போவதுதான். வார இறுதி நாட்களில் சென்னையில் வசிப்பவர்கள் ஷாப்பிங் செல்லும்போது தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதற்கு தீர்வு காணும் விதமாக சூப்பர் திட்டம் ஒன்றை 'கும்டா' கையில் எடுத்துள்ளது.
சென்னையில் தற்போது கார்கள் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் ஷாப்பிங் செல்லும் போது சொந்த வாகனங்களை பயன்படுத்துவதையே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இப்படி செல்லும் போது பெரிய பிரச்சினையாக இருப்பது பார்க்கிங்தான்.

பார்க்கிங் பகுதிகளில் ஏற்கனவே வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் என்பதால் வாகனங்களை எங்கே நிறுத்துவது? என வாகன ஓட்டிகள் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள். நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து விடுவார்கள். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கார்களை வெளியில் எடுத்து செல்லவே வாகன ஓட்டிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது.
இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வாகன ஓட்டிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முன்பே வாகன நிறுத்துமிடத்தை எளிதாக கண்டறிந்து முன்பதிவு செய்ய உதவும் வகையில், புதிய திட்டம் ஒன்றை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) கையில் எடுத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
கார் வைத்திருப்பவர்கள் பார்க்கிங்க் செய்யும் இடத்தை முன் கூட்டியே புக் செய்து கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவு பெற்றுவிடும். முதல் கட்டமாக அண்ணா நகரில் செயல்படுத்தப்படும். அதன்பிறகு முக்கிய பகுதிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
எனவே இந்த ஆப் மூலம் புக் செய்யும் போது பார்க்கிங் பகுதியை பதிவு செய்து கொள்ள முடியும். தாங்கள் தேர்வு செய்த நேரம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாக அவர்களுக்கு அலார்ட் செய்யப்படும். இந்த சேவை இலவசமாக இருக்காது. பகுதிக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தற்போது இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 1.500 பார்க்கிங் பகுதிகள் வரை இருக்கும்.
பார்க்கிங் கொள்கைகள் வகுக்கப்பட்ட பிறகு இதற்காக டெண்டர் விடப்படும். சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் டெண்டர் அடிப்படையில் செயல்படுத்தப்படும்." என்றார்.
தி.நகர் போன்ற வணிக பகுதிகளுக்கு செல்லும் போது வாகன ஓட்டிகள், தங்கள் கார்களை நிறுத்த பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே, வாகனங்களை முன் கூட்டியே புக் செய்து பார்க்கிங் செய்யும் வசதி வந்தால் எந்த சிரமும் இன்றி வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்ல முடியும். எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்தப்படுகிறதோ.. அதற்கேற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications