காங்கிரசில் ஒருசிலர் உயிரை வாங்குகிறார்கள்.. கூட்டணி ஆட்சிக்கு நோ சான்ஸ்.. அமைச்சர் ராஜகண்ணப்பன்
புதுக்கோட்டை: காங்கிரசில் ஒரு சிலர் உயிரை வாங்கி வருவதாகவும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். தமிழகத்தில் 1967 க்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் வர முடிந்ததா? திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும் என்றார்.
திமுக சார்பில் தமிழகம் முழுக்க தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பிரசார கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக அமைச்சர்களான ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருணாநிதி கூட்டணி ஆட்சி கொடுத்தாரா?
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்னப்பன், காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் உயிரை வாங்கி வருகிறார்கள் என்று கூறினார். அவர் பேசியதாவது:- எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கை. திராவிட இயக்கத்தை வெல்ல வேண்டும் என்றால் இனிமேல், ஒருவன் பிறந்து தான் வர வேண்டும்.
கடந்த 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்புறம் அவர்களால் ஏன் வர முடியவில்லை. இதனை சொன்னால் கோபித்து கொள்வார்கள். கருணாநிதி 110 இடங்களில் வென்றார். அப்போது, அவர் என்ன கூட்டணி ஆட்சி கொடுத்தாரா? காங்கிரஸ்காரர் நம்மோடு இருந்தால் இருந்துட்டு போகட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை..
உயிரை வாங்குகிறார்கள்
செல்வப்பெருந்தகையும், நானும் நேற்று முன் தினம் கூட ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்து பேசினோம். என்ன செய்வது, கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம்.. போய் நிற்கிறோம்.. எந்த கூட்டணி என்றாலும் சரிதான்.. முதல்வர் ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை.
தனியா நிக்கணும் என்று சொன்னால் கூட ரெடி தான்.. தேர்தலால் என்ன கெட்டு போய்விட்டோம்.. காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். கூட்டணி ஆட்சிக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. ப. சிதம்பரம் சிவகங்கையில் ஜெயித்ததால் கெட்டு போய்விட்டதா என்ன? அவர் வெற்றி பெற்றது தொடர்பான வழக்கு என்ன ஆனது என்று முதல்வர் ஒரு முறை கேட்டார். நீங்கள் தான் நிறுத்தி வைக்க சொன்னீர்கள். நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். என்று அவர் கூறினார்.
டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது என்றாலும், காங்கிரஸில் உள்ள பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவாக பேசி வருவதும், ஆட்சியில் பங்கு, 40 தொகுதிகள் என கேட்டு வருவது திமுகவிற்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொகுதி பங்கீடில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் திமுக இன்னும் அதற்கான முயற்சியினை எடுக்காததால் இன்று ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் தலைமையில் டெல்லியில் நடக்கும் ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை கூற உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு என்ன மாதிரியான முடிவினை காங்கிரஸ் தலைமை எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கியுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications