Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மாமியாரை மருமகன் இப்படியுமா ஏமாற்றுவாங்க.. 35 லட்சம், 30 பவுன் தங்கம்.. போன பின் ஞானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்களுடன் தனியாக வசிக்கும் மாமியார்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டிய காலம் இது. பெற்ற மகளும், மருமகனுமே இந்த காலத்தில் பாசம் காட்டுவது போல் நடித்து சிறுக சிறுக பணம், நகை, சொத்துக்களை பறிக்கவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே நமது சமூகத்தில் பெண்கள், தங்கள் மகளை பார்க்கும் அளவிற்கு, மருமகளை பார்ப்பது கிடையாது. இதை பயன்படுத்தி சில மருமகன்கள் சொத்துக்களை வளைத்துவிடுகிறார்கள். சென்னை அயனாவரத்தில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. அது பற்றி பார்ப்போம்.

இன்றைக்கு கணவனை இழந்து சொத்துக்களுடன் தனியாக வசிக்கும் மாமியார்கள் பலர், மருமகளை விட, மகளை தான் அதிகம் நேசிக்கிறார்கள். அதேபோல் மகனை விடவும் மருமகன் மீதும் சிலர் அதிக பாசம் காட்டுகிறார்கள். அப்படி காட்டப்படும் பாசத்தை தவறாக மருமகன்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. சொத்து இருக்கும் வரை மகளும், மருமகனும், மாமியாரை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள்.

Son-in-law arrested for cheating mother-in-law of 30 Sovereign gold and Rs 35 lakhs in Chennai
Photo Credit:

மரியாதை போய்விடும்

மகன் வீட்டில் அதிகாரம் செய்யும் மாமியார், மருமகன் வீட்டில் போய் வேண்டிய உதவிகள், செலவுகளை செய்து வருவார். அப்போது, மருமகன், உங்களை போல் மாமியார் கிடைப்பார்களா என்பது போல் பாசம் காட்டி, பணம், நகைகளை சிறுக சிறுக பறிப்பார்கள். ஒரு கட்டத்தில் மகளும், மருமகனும் எல்லாவற்றையும் பறித்துவிடுவார்கள்.. எல்லாம் போன பின்னர், அந்த அளவிற்கு மரியாதை கிடைக்காத நிலை ஏற்படும். அப்போது தான் எதார்த்தம் என்னவென்று மாமியாருக்கு தெரியவரும். வேறுவழி இல்லாமல் மகளை நினைத்து நொந்து கொள்வார். பல இடங்களில் அப்படி நடந்து வருகிறது. சென்னை அயனாவரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சசிகலாவின் மருமகன்

சென்னை அயனாவரம் திருமலை ராஜா தெருவை சேர்ந்த 59 வயதாகும் சசிகலாவிற்கு கணவர் இறந்துவிட்டார். சசிகலா தனது ஒரே மகளை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் வசிக்கும் 38 வயதாகும் வையாபுரி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சசிகலாவின் மகள் விமான விபத்தில் இறந்து விட்டார். சசிகலா மட்டும் அயனாவரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்,

35 லட்சம், 30 பவுன் தங்கம்

சசிகலாவின் மருமகன் வையாபுரி அடிக்கடி தனது மாமியாரிடம் பேசி நீங்கள் அயனாவரத்தில் தனியாக இருக்க வேண்டாம், உங்களது வீட்டை விற்று சென்னையில் ஒரு வீடு வாங்கி அதில் அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என கூறிவந்திருக்கிறார். அதனை நம்பி சசிகலாவும் 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 லட்சத்தை மருமகன் வையாபுரிக்கு கொடுத்துள்ளார்.

2வது திருமணம்

இதையடுத்து வையாபுரி வேரோறு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மாமியார் சசிகலாவிடம் வாங்கிய நகை, பணத்தை திரும்பி கொடுக்கவே இல்லை என்று கூறப்படுகிறத. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை ஏமாற்றிய வையாபுரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+