"இந்தியா" கூட்டணி கூட்டத்தில் ஸ்டாலின், டிஆர் பாலுவை அவமதித்தாரா சோனியா? பாஜக பகிரும் வீடியோ!
சென்னை: "இந்தியா" கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டிஆர் பாலு ஆகியோரை மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டுகொள்ளாமல் அவமரியாதை செய்ததாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், என்சிபி, ஆர்ஜேடி, ஜேடியூ உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா கூட்டணியின் முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னா, பெங்களூர் மற்றும் மும்பையில் நடைபெற்றன. 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் "இந்தியா" கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு, வைகோ, திருமாவளவன், மமதா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தை முன்வைத்து "திமுகவுக்கு காங்கிரஸ் கொடுக்கும் மரியாதை" என்ற தலைப்பில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். அந்த 30 செகண்ட் வீடியோவில், அரங்கில் நுழையும் சோனியா காந்தி, நிதிஷ்குமார் இருக்கைக்கு சென்று வணக்கம் வைக்கிறார். பின்னர் லாலு பிரசாத் யாதவிடம் நலம் விசாரிக்கிறார். பின்னர் முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு அமர்ந்திருந்த இருக்கை பக்கம் திரும்பாமலேயே அடுத்தடுத்து அகிலேஷ் யாதவ் என பலருக்கும் சோனியா வணக்கம் செலுத்துகிறார். சோனியா தங்களை கடந்து செல்வதை முதல்வர் ஸ்டாலினும் டிஆர் பாலுவும் பார்ப்பதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
திமுகவுக்கு காங்கிரஸ் கொடுக்கும் மரியாதை 😯 pic.twitter.com/NhJCSD4UVR
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) December 20, 2023
இருந்த போதும் நிதிஷ்குமார் அருகே இருந்த மமதா பானர்ஜிக்கும் கூட சோனியா காந்தி வணக்கம் வைக்கவில்லை. மல்லிகார்ஜூன கார்கே இருக்கையையும்தான் சோனியா காந்தி கடந்து செல்கிறார். மமதா, ஸ்டாலின், டிஆர் பாலுவை முன்னரே கூட சோனியா காந்தி வணக்கம் செலுத்தியதால் அரங்கத்தில் இயல்பாகவும் கடந்து போயிருக்கலாம்.. இதை எல்லாம் பாஜகவினர் ஊதிப் பெரிதாக்குகிறார்களே? என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications