முரசொலி நாளிதழுக்கு அதிநவீன அச்சகம்! கருணாநிதியின் மூத்த பிள்ளையை மெருகேற்றிய ஸ்டாலின்!
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கு அதிநவீனமுறையில் புதிய அச்சகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், செல்வி, கனிமொழி எம்.பி., தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின் கலாநிதி மாறன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எளிய முறையில் குறைந்த நேரத்தில் முரசொலி நாளிதழ் அச்சிடப்படக் கூடிய வகையில் பல புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

முரசொலி நாளிதழ்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக திகழும் முரசொலியை, கருணாநிதி உயிருடன் இருந்த வரை தமது மூத்த பிள்ளையாகவே பாவித்து வந்தார். மேலும், முரசொலி மூலம் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது, எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி பதில் வடிவில் இடித்துரைப்பது, என நாள்தோறும் முரசொலிக்காக தனது பேனா முனையை கொண்டு ஈட்டி முனையான வார்த்தைகளை கோர்த்து வந்தார் கருணாநிதி.

சமூக வலைதளப்பக்கம்
முன்பெல்லாம் திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள், கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை முரசொலி மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். இப்போது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் வந்துவிட்டதால் கட்சியினரின் செயல்பாடுகளை உடனுக்குடன் அதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் முரசொலி படிப்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது குறையத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முரசொலி ஆசிரியர்
இந்நிலையில் முரசொலி நாளிதழை புதுப்பொலிவுடன் நவீன அச்சு இயந்திரம் மூலம் வெளியிடக்கூடிய வகையில் பல கோடி ரூபாய் செலவில் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அச்சகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றாலும் கூட, முரசொலி ஆசிரியர் என்ற முறையில் அவரது மாமாவான முரசொலி செல்வத்தையே புதிய அச்சகத்தை திறக்க வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரியை தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.
Recommended Video

பவள விழா
முரசொலி நாளிதழ் 80 ஆண்டுகளை கடந்து வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டு விழாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் முரசொலி நாளிதழில் புதிய கட்டுரை மற்றும் செய்தி பகுதிகள் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications