சாரி மைலார்டு! சட்டென சொன்ன கபில் சிபல்.. உடனே நீதிபதி தந்த ரியாக்சன்! செந்தில் பாலாஜி வழக்கில் பரபர
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுவாரசியமான வாதம் நடைபெற்றது.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார். அதில், அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.
பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருதப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.
கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்..
நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை.
செந்தில் பாலாஜியை சிஆர்பிசி சட்டப்படி கைது செய்ய அமலாக்கத்துறை போலீஸ் கிடையாது. செந்தில் பாலாஜியை கைது செய்யும் வரை என்ன ஆதாரங்கள் இருந்ததோ அது மட்டுமே அவர்கள் கோர்ட்டில் பயன்படுத்த முடியும். கைது செய்யப்பட்ட பின் பிடுங்கப்பட்ட ஆதாரங்களை கோர்ட்டில் பயன்படுத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19 படி, கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது கைது செய்ய அதிகாரம் இல்லை என்கிறீர்களா? அல்லது காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்கிறீர்களா?
கபில் சிபில்: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை பொருத்தமட்டில், ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன் படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்யதான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.
இதையடுத்து திடீரென கபில் சிபல் இருமிய நிலையில் அவரிடம் நீதிபதி கேள்வி ஒன்றை முன் வைக்க வந்தார். அதற்கு கபில் சிபல்.. சாரி மைலார்ட் எனக்கு உடம்பு சரியில்லை. நான் தண்ணீர் குடித்துக்கொள்கிறேன் என்று கூறினார். அதற்கு நீதிபதி அனுமதித்தார். இன்று நீதிபதி - வழக்கறிஞர் கபில் சிபல் இடையே வழக்கு தாண்டியும் தன்மையான சுவாரசியமான ஆலோசனை நடந்தது. உதாரணமாக நீங்கள் மிகவும் தன்மையுடன் இருக்கிறீர்கள் என்று கூட கபில் சிபல் நீதிபதி கார்த்திகேயனிடம் நட்பாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை வாதம் இனிமேல் வைக்கப்படும். அதேபோல் செந்தில் பாலாஜி சார்பில் என். ஆர். இளங்கோவும் ஆஜராகி வாதம் வைக்க உள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications