சாரி பாகிஸ்தான்.. இந்தியா - பாக் மேட்சில் பரபர சம்பவம்.. தேசிய அளவில் #SorryPakistan டிரெண்ட்.. ஷாக்
சென்னை: இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் மேட்சில் பாகிஸ்தான் வீரர்கள் அவமதிக்கப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் செயலியில் #SorryPakistan என்ற டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
நேற்று பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் நடந்தது. இதில் இந்திய ரசிகர்கள்.. பாகிஸ்தான் வீரர்களை தொடர்ந்து மோசமாக நடத்தி கோஷங்களை எழுப்பினர். உதாரணமாக டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

டிரெண்டிங்: முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது எக்ஸ் செயலியில் #SorryPakistan என்ற டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
( கதறல்! அவமானம்! இதே நிலை தொடர்ந்தால்.. அந்த இந்திய வீரருக்கு ஜாக்பாட்தான்.. உலக கோப்பையில் ட்விஸ்ட்)
அதில் பாகிஸ்தானிடம் இந்தியர்கள் பலர் மன்னிப்பு கேட்டு போஸ்ட் செய்துள்ளனர். மத்த நாட்டுக்காரன்லாம் அவன் அவன் நாட்டை எப்படி பெருமைப்படுத்தலாம்னு யோசிச்சிட்டு இருக்குறப்போ, நீங்க மட்டும் ஏன்டா உங்க மதவெறியால எந்நேரமும் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்திட்டு இருக்கீங்க... என்று நெட்டிசன் ஒருவர் கோபமாக போஸ்ட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் சம்பவம்: 1997ல் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 197 அடித்தார். அப்போது சென்னை ரசிகர்கள் அவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள். இதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் வைத்து வருகின்றனர். அதில், தமிழன் என்று ஒரு இனமுண்டு அவனுக்கு தனி ஒரு குணமுண்டு. பாகிஸ்தானின் அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னையில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக உபசரிக்க வேண்டும், அவர்களை ரசிகர்கள் சரியாக நடத்த வேண்டும். சென்னை மக்கள் எவ்வளவு விருந்தோம்பல் கொண்டவர்கள், தன்மையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன என்று கூறி வருகின்றனர்.

நேத்து பாக்கிஸ்தான் மேட்ச்ல ஜெய் ஸ்ரீராம்னு கத்துன சரி.. 29ம் தேதி இங்கிலாந்து கூட மேட்ச் இருக்கு அப்ப 300 வருசமா நம்மளை ஆண்ட "வெள்ளையனே வெளியேறு" ன்னு கத்துவியா?!, என்று கேட்டு நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக கிரிக்கெட் என்ற போட்டி ஒன்றில் இப்படி மத ரீதியான கோஷங்களை எழுப்புவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். அரசியல், மதத்தை கிரிக்கெட் உடன் சேர்ப்பது.. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மோசமாக நடத்துவது தவறு .. விளையாட்டு அரசியல், மதம் கலப்பதை அனுமதிக்க முடியாது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.,












Click it and Unblock the Notifications