Sowmiya: சவுமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ரூ 65.94 கோடி! 365 பவுன் தங்கம்! 26 கிலோ வெள்ளி!
சென்னை: தருமபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சவுமியா அன்புமணியின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.
தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவர் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி எம்பி தொகுதியில் போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்தார்.

பாமக ராமதாஸ் அணி, அன்புமணி அணி என பிளவுப்பட்டுள்ள நிலையில் அன்புமணி அணிக்கே மாம்பழச் சின்னம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாம்பழச் சின்னத்தை அன்புமணிக்கு கொடுக்கக் கூடாது என கூறி ராமதாஸ் வழக்கு பதிந்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் அன்புமணி பாமக கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்புமனுவை சவுமியா தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் சொத்து விவரம், குற்ற வழக்குகளை குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.
அதில் சவுமியாவின் சொத்து மதிப்பு ரூ 65.94 கோடியாகும். அதில் ரூ. 17.15 கோடி அசையும் சொத்தும், ரூ 48.79 கோடி அசையா சொத்தும் இருக்கிறது.
அது போல் அவரது கணவர் அன்புமணிக்கு ரூ 1.51 கோடி அசையும் சொத்து, 6.85 லட்சம் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளது.
சவுமியா அன்புமணி பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட போது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுமியா கையில் 2.25 லட்சம் ரொக்கமும், கணவர் கையில் ரூ 60 ஆயிரமும் மகள் சஞ்சுத்ரா கையில் 20 ஆயிரமும் சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அது போல் ரூ.9.47 லட்சத்தில் ஹோண்டா ஜாஸ் கார், ரூ 53.59 லட்சத்தில் பென்ஸ் கார் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் வெள்ளி 26.44 கிலோ எடை கொண்டவை இருக்கின்றன. அதன் மதிப்பு ரூ 68.74 லட்சமாகும். அன்புமணியிடம் 2.50 கிலோ எடை கொண்ட ரூ 6.50 லட்சம் மதிப்பிலான வெள்ளி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுமியாவிடம் 2927 கிராம் ரூ 4.26 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் அன்புமணியிடம் 960 கிராமில் ரூ 1.39 கோடி மதிப்பிலான தங்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது போல் 151.151 காரட் சுமார் 1.64 கோடியில் வைர நகைகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications