சௌமியா அன்புமணி மீண்டும் அசத்தல்.. “Excellent” என பாராட்டிய கமல்ஹாசன்.. என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக எம்எல்ஏவாக அடியெடுத்து வைத்துள்ள பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணியின் செயல்பாடுகள், இப்போது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தொகுதி பிரச்சனைகள் தொடங்கி, மக்கள் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் வரை தரவுகளுடன் அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் சௌமியா அன்புமணியைப் பாராட்டியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து பாமக தேர்தலை சந்தித்தது. இதில் தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.. பாமக சார்பில் மொத்தம் 4 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வான நிலையில், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராகவும் சௌமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார்.

Soumya Anbumani

சௌமியா அன்புமணி

எம்எல்ஏவாக பொறுப்பேற்றது முதல் தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மட்டும் சௌமியா பேசவில்லை. காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை, மது விலக்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளையும் சட்டப்பேரவையில் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.

குறிப்பாக, சிக்கலான விவகாரங்களையும் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளுடன் எளிமையாக எடுத்துரைப்பது அவரது பேச்சின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. நேற்று கூட சமீபத்தில் மதுவிலக்கு தொடர்பான விவாதத்திலும் சௌமியா அன்புமணியின் பேச்சு கவனம் பெற்றது.

டாஸ்மாக் மதுபான விற்பனை

டாஸ்மாக் மதுபான விற்பனை குடும்பங்களின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், பண்டிகை காலங்களில் மதுவுக்காக செலவிடப்படும் பணம் குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம், வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டியவை என வலியுறுத்தினார். மேலும், மதுவிலக்கை குறைந்தபட்சம் ஒரு கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த துணை சபாநாயகர் ரவிசங்கர், சௌமியா அன்புமணி தரமான தரவுகளுடன் ஆக்கப்பூர்வமாக பேசுவதாகப் பாராட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரவிசங்கர் குறிப்பிட்டது கூடுதல் கவனத்தை பெற்றது.

Excellent - சகோதரி சௌமியா

இந்த நிலையில், சௌமியா அன்புமணியின் செயல்பாடுகளை கமல்ஹாசனும் பாராட்டியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள்நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தனது பதிவில், "Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்" என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபக்கம் தவெக அமைச்சர்களின் பேச்சுக்களும், அவர்களின் தமிழ் உச்சரிப்புகளும் சோஷியல் மீடியாவில் டிரோல் ஆகி கொண்டிருக்கும் நிலையில், முதல் முறையாக சட்டமன்றத்துக்கு வந்த குறுகிய காலத்திலேயே, ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பாராட்டுகளை சௌமியா அன்புமணி பெற்று வருவது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது...

இப்போது கமல்ஹாசனின் "Excellent" பாராட்டும் அதில் இணைந்திருப்பதால், சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணியின் செயல்பாடுகள் அரசியல் எல்லைகளைத் தாண்டி பேசுபொருளாகி வருகின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+