ஓபனிங்க்லயே எண்ட் கார்ட்.. இப்போதைக்கு வேண்டாம்! விஜய் எடுத்த திடீர் முடிவு..அதிருப்தியில் மா.செ.கள்
சென்னை: செப்டம்பர் 23ஆம் தேதி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை ஒத்திவைக்க விஜய் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தேதி தள்ளிப் போனாலும் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என விஜய் எதிர்பார்ப்பதால் இந்த தாமதம் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
தொடர்ந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடிகரும் தமிழக வெற்றிக்காக தலைவர் ஆன விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒருபுறம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது. இதை அடுத்து அவரது ரசிகர்கள் படத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இது ஒருபுறம் இருக்க அவரது அரசியல் வருகையும் இந்த செப்டம்பர் மாதம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருக்கிறது என கூறினர். செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர்.
மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடுகள் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்க விஜய் கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் சிக்கி வருவது வழக்கம் தான். கட்சியின் கொடி வெளியிட்ட போதே பல்வேறு சிக்கல்கள் வந்தது. கொடி தொடர்பாகவே தேர்தல் ஆணையத்திலும் தற்போது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினர். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதற்கு விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதில் அளித்தார். இதனையடுத்து விஜய்யின் தவெக முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. மாநாட்டின் மேடை, மாநாட்டு இடம், பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்களை கொடுக்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும், விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி அதாவது 13 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் பத்து நாட்களே இடையில் இருக்கிறது. இதனால் மாநாடு தள்ளிப் போகலாம் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக முதன்முறையாக மிகப்பெரிய அளவிலான மாநாட்டை நடத்தப் போகிறோம், இதற்கு முன் மாணவர் சந்திப்பு போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் குறைபாடு இல்லாத வகையில் பார்த்துக் கொண்டோம். எனவே முதல் மாநாடு எவ்வித சிக்கலும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும். ஒரு சில நாட்கள் தாமதம் ஆனாலும் சரி பின்னர் மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை அளித்துள்ள பல்வேறு நெருக்கடிகளும் மாநாடு தள்ளிப் போக காரணம் என கூறப்படுகிறது. மாநாட்டுக்கு காவல் துறையினர் உள்ள கட்டுப்பாடுகளால் மாநாட்டு பணிகள் தாமதமானதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிமுக திமுக போன்ற கட்சிகளில் இருப்பது போல அரசியலில் சீனியர்கள் இல்லாதது அதிமுக மாநாடு தள்ளிப்போனதற்கு ஒரு காரணம் என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இடைப்பட்ட காலத்தில் மாநாடு நடத்துவதை விட புத்தாண்டு பொங்கல் சமயங்களில் மாநாடு நடத்தினால் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கும் எனவே போது மாநாட்டை அப்போது நடத்திக் கொள்ளலாம் என ஒரு குரூப் சொல்லி இருக்கிறது.
அதே நேரத்தில் இவ்வளவு இடைவேளை தேவையில்லை, அதனால் அக்டோபரில் மாநாட்டை நடத்தலாம் என விஜய் நினைப்பதாகவும், இதற்கு ஜோதிடர்களும் பச்சை கொடி காட்டி இருப்பதால் மாநாடு நடக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் பிளக்ஸ் பேனர்கள், வாடகை வாகனங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்த ஒரு சில மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications