சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடியார் கேட்ட "அந்த" கேள்வி.. அப்படியே உறைந்து அமைதி காத்த அமைச்சர்கள்..!

சசிகலாவின் வருகை முதல்வர் தரப்புக்கு கலக்கத்தை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: உறுதிப்படுத்தப்படாத விஷயம் ஒன்று கசிந்து வருகிறது.. அது சசிகலாவின் வருகையும், முதல்வரின் உருக்கமான வேண்டுகோள் பற்றியது..!

ரிலீசுக்கு பிறகு, சசிகலா இன்னும் ஒருவார்த்தைகூட பேச ஆரம்பிக்கவில்லை.. அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால், அதற்கு முன்பே அரசியல் அதிர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

அமமுக - அதிமுக இணையும் என்கிறார்கள்.. இன்னொரு பக்கம் சட்டசிக்கலை முன்வைத்து சசிகலாவின் நகர்வுகள் உள்ளன.. இதனிடையே 7-ம் தேதி அவர் சென்னைக்கு வர போகிறார்..

அதிமுக கொடி விவகாரம் ... சசிகலா மீது அமைச்சர்கள் புகார் அதிமுக கொடி விவகாரம் ... சசிகலா மீது அமைச்சர்கள் புகார்

 வருகை

வருகை

சசிகலாவின் வருகை எடப்பாடியாரை லேசாக அசைத்து பார்க்க ஆரம்பித்துள்ளது.. அவரது ரீ-என்ட்ரியால் தன்னுடைய முக்கியத்துவம் இழந்துவிடக்கூடும் என்ற கலக்கமும் சேர்ந்துள்ளது. அதனால் அதிமுக தரப்பில் யாரெல்லாம் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்களோ, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் பணி நடந்து வருகிறது.

கூட்டம்

கூட்டம்

இந்நிலையில், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் சில விஷயங்களை உருக்கமாக பேசினாராம்.. வழக்கமாக கூட்டம் முடிந்து, அதிகாரிகள் அனைவரும் சென்ற பிறகு, அமைச்சர்களிடம் முதல்வர் மனம் விட்டு பேசியிருக்கிறார்.

 துரோகம்

துரோகம்

சசிகலாவுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்துட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும், இருந்தாலும், இந்த 4 வருஷத்தில் உங்களை சுதந்திரமா செயல்படவிட்டிருக்கேன்.. அதிமுகவுக்கு என்று மக்களிடம் ஒரு பெயர் இருக்கிறது.. தயவுசெய்து யாரும் துரோகம் மட்டும் செய்துவிட வேண்டாம்.. வரப்போகும் தேர்தலின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கெண்டாராம்.."

மவுனம்

மவுனம்

அமைச்சர்கள் பலர் முதல்வரின் இந்த உருக்கமான பேச்சை கேட்டுக் கொண்டார்களாம்.. ஆனால் எந்த பதிலும் சொல்லவில்லை போலும்.. இதனிடையே, தொடர் திரைமறைவு ஆதரவு தந்து வரும் சில அமைச்சர்களை களை எடுக்கவும் முதல்வர் யோசித்து வருகிறாராம். ஏற்கனவே சசிகலாவை வரவேற்க பல அமைச்சர்களும், 50 எம்எல்ஏக்களும் தயாராக இருக்கிறார்கள் என்று செய்திகள் பரபரத்து வரும் நிலையில், மேலும் சில அமைச்சர்களின் மவுனம் எதையோ உணர்த்தி கொண்டே இருக்கிறது.

English summary
Sources say that CM Edapadi Palanisamy talked with ministers about Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X