இவர் வந்தா "25".. அவங்களுக்கு "16".. தில்லாக காத்திருக்கும் திமுக.. செம ஸ்டிராட்டஜி!

திமுகவுடன் கமல் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மநீம கட்சி திமுகவுடன் கூட்டணியில் இணையும் போல தெரிகிறது.. அதற்கான தீவிர பேச்சுக்களும் தற்போது எழுந்து வருகின்றன..!

திமுக கூட்டணியில் மநீம ஏற்கனவே கூட்டணி வைப்பதாக செய்திகள் வந்தன.. உதயநிதியிடம் இதற்கான பேச்சுவார்த்தையை கமல் நடத்தியதாகவும், ஆனால், கமல் கேட்ட சீட் எண்ணிக்கைக்கு திமுக தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டது.

அதாவது, கமல் 40 சீட் கேட்டதாக சொல்கிறார்கள்.. அதற்கு அதிகபட்சமாக 25 சீட் தருகிறோம் என்று உதயநிதி சொன்னாராம்.. இதற்கு பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.

 சைலண்ட்

சைலண்ட்

சில தினங்களுக்கு முன்பு மட்டும் இன்னொரு செய்தி வந்தது.. கமலுக்கு இப்போது எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, சைலண்ட்டாக ஒரு சர்வேயை ஐபேக் டீம் எடுத்ததாகவும், அதில் 2 சதவீத ஆதரவு மட்டுமே கமலுக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.. அதோடு சரி, மநீமய்யத்துடன், திமுக கூட்டணிக்கான பேச்சையே எடுக்கவில்லை.

 பாமக

பாமக

இதனிடையே, பாமகவும் அதிமுகவில் முரண்டு பிடித்து வரவும், தங்கள் பக்கம் இழுக்கும் வேலையையும் திமுக லைட்டாக ஆரம்பித்துள்ளது.. அதிலும் துரைமுருகன்தான் அதிக ஆர்வம் காட்டி உள்ளார்.. அதாவது அதிமுகவை பெரும்பான்மையோடு வெற்றி பெற, பாமகவும் தங்களுடன் இணைந்தால் பலனாக இருக்கும் என்று துரைமுருகன் நினைத்தார்.

வாக்குகள்

வாக்குகள்

அதேசமயம், கமல் 3வது அணி அமைத்துவிட்டால், அது தங்களின் வாக்குகளை சிதறடித்துவிடும் என்பதையும் திமுக யோசிக்காமல் இல்லை.. அந்த வகையில் ஒன்று பாமகவை உள்ளே இழுத்து போடுவது அல்லது கமலை உள்ளே இழுத்து போடுவது என்ற இந்த 2 முடிவில் திமுக இருந்ததாக தெரிகிறது.. இப்போது அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சு நடத்தி வருவதாலும், இடஒதுக்கீடு விஷயத்தை ராமதாஸை சமாதானப்படுத்தி வருவதாலும் அநேகமாக அங்கேயே பாமக கூட்டணியை தக்க வைத்து விடும் என்று தெரிகிறது.

 கூட்டணி

கூட்டணி

அந்த வகையில், பாமக இல்லாததால், கமலை மறுபடியும் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியில் திமுக இப்போது இறங்கி உள்ளது.. ஆனால் காங்கிரஸ் சென்ற முறை போலவே இந்த முறையும் தாராளமாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரி வருகிறது.. இதற்கு திமுக தலைமை சம்மதிதக்கவில்லை.. காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்வியால்தான், ஆட்சி அமைக்க முடியாத நிலை தொடருகிறது என்ற எண்ணம் திமுகவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

 25 தொகுதிகள்?

25 தொகுதிகள்?

அதனால், இந்த தேர்தலில், அந்த கட்சிக்கு ஒதுக்கப்படும், 41 தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக, மய்யத்துக்கு 25 தொகுதிகளும், மீதமுள்ள 16 சீட்டுக்களை காங்கிரசுக்கும் ஒதுக்க, திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இதை கேட்டு காங்கிரஸ் அதிர்ந்து போய் உள்ளதாம்.. ஏற்கனவே கூடுதல் தொகுதி கேட்டுக் கொண்டிருந்தால், இருப்பதிலும் எடுத்து மய்யத்துக்கு ஒதுக்குவதாக கூறுவது அதிருப்தியை தந்து வருகிறது.

 அதிருப்தி

அதிருப்தி

கமலை கூட்டணிக்குள் வருமாறு அழைத்து கொண்டே இருந்தது தமிழக காங்கிரஸ்தான்.. இப்போது தங்களுடைய பங்கை கமலுக்கு ஒதுக்குவதால், விமர்சிக்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் வாயடைத்து போய் உள்ளதாம் காங்கிரஸ்.. இப்படித்தான் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களும் அப்செட்டில் உள்ளபோது, இந்த அதிருப்தியில், தமிழக காங்கிரசும் ஐக்கியமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+