பாஜக வெற்றி கண்டு பதறிய ஸ்டாலின்.. 3வது அணிக்கு அடிபோடும் காங்கிரஸ்.. உடைகிறதா கூட்டணி?

காங்கிரஸ் 3வது அணி அமைக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகாரில் பாஜகவின் வெற்றியை பார்த்து ஸ்டாலின் பதறிபோய் விட்டார் என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் அந்த ஷாக் தமிழக காங்கிரசுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.. கூட்டணியில் இருந்து திமுக கழட்டிவிட்டாலும், கமல் தலைமையில் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்க காத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. கடந்த முறை எம்பி தேர்தலில் 10 சீட்டுகளை வம்படியாக பெற்றுக் கொண்டு பெரும் தோல்வியை சந்தித்தது காங்கிரஸ்.

எடுத்த எடுப்பிலேயே எதற்காக 10 சீட் தந்தோமோ என்று திமுகவும் பின்னாளில் வருத்தப்பட்டது, இப்போதும் வருத்தத்தில் உள்ளது என்பது வேறு விஷயம்.

 கூட்டணி

கூட்டணி

ஆனால், கடந்த காலங்களைவிட இப்போது திமுக - காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்திகள் நிலவி வருகின்றன.. குறிப்பாக அழகிரி மாநில தலைமைக்கு பொறுப்பில் வந்ததில் இருந்தே, அவர்களுக்குள் கூட்டணி இணக்கமாக இல்லை.. நிறைய வார்த்தைகளை திமுகவுக்கு எதிராக விட்டுவிட்டார் அழகிரி.. அதன்பிறகு அறிக்கைகளை வெளியிட்டு அவைகளை சரிக்கட்டினாலும், பிரச்சனை உள்ளுக்குள் மறைமுகமாக ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.

 மா.செ.க்கள்

மா.செ.க்கள்

அதேபோலதான் நேருவும், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று தனது அதிருப்தியையும் வெளிக்காட்டினார். இப்போது தேர்தல் நெருங்குவதால், வழக்கம்போல அதிக சீட்டுகளை காங்கிரஸ் கேட்க முனையும் என்பதால், அதற்கு திமுக நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.. சில திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணியில் காங்கிரஸ் வேண்டவே வேண்டாம் என்று ஓபனாகவே சொல்லிவிட்டனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இப்போது பீகார் தேர்தலிலும் காங்கிரஸ் மண்ணை கவ்விவிடவும், திமுக பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது.. இந்த நிலைமை தமக்கு வந்துவிடக்கூடாது என்பதிலும் அலர்ட் ஆகி வருகிறதாம்.. ஆனால், காங்கிரஸ் எதை பற்றியும் கவலைப்படுவது போல தெரியவில்6ல.

 யோசனை

யோசனை

20 சீட்களை மட்டும் ஒதுக்கிவிடலாமா என்ற திமுகவின் யோசனையை காங்கிரஸ் ஏற்காது என்றும் தெரிகிறது.. அப்படி 20 அல்லது 21 சீட்களை தந்தும் ஏற்கவில்லையானால், கூட்டணியை விட்டே ஒதுக்கிவிடவும் திமுக தயங்காது என்கிறார்கள். இங்குதான் காங்கிரஸ் அலர்ட் ஆகி உள்ளது. ஒருவேளை திமுக கழட்டிவிட்டுவிட்டால் என்ன செய்வது என்று பலமான யோசனையில் உள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

அதனால்தான் தினேஷ் குண்டுராவ் தலைமையில் சென்னையில் ஆலோசனையும் நடந்துள்ளது.. ஒன்று தாம் கேட்கும் தொகுதிகளை திமுக வழங்காது அல்லது கேட்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை வழங்காது என்பதில் மட்டும் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. அப்படியானால் அடுத்து அந்த கட்சி இனி என்ன செய்யும்? என்ற கேள்வியும் எழுகிறது.

கூட்டணி

கூட்டணி

கண்டிப்பாக 3வது அணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் முனையலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுக்கொரு கருத்தை சொல்லி, முட்டிக் கொண்டும், மோதிக் கொண்டும் உள்ள நிலையில், தற்போது சீட் விவகாரத்தில் வெளிப்படையாகவே, கூட்டணி உடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி 3வது அணிக்கு காங்கிரஸ் ரெடியானால், நிச்சயம் கமல் தலைமையில்கூட இருக்கலாம், அல்லது டிடிவி தினகரன் தலைமையில்கூட அமையலாம் என்கிறார்கள்.

 கமல்

கமல்

கமலை பொறுத்தவரை காங்கிரசுடன் நெருக்கமாகவே இருக்கிறார்.. அவர் பிறந்த நாளைக்கு ராகுலும் வாழ்த்து சொல்லி இருந்ததையும் சற்று கவனிக்க வேண்டி இருக்கிறது.. அதேபோல, காங்கிரசுக்கும் அமமுகவுக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை.. அந்த வகையில், ஒன்று, திமுகவிடம் கட் & ரைட் ஆக பேசி தொகுதிகளை வாங்குவது அல்லது கமல் தலைமையில் 3வது அணி அமைவது என்ற முடிவை எடுக்கவும் காங்கிரஸ் தயங்காது என்கிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+