Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முரண்டு பிடிக்கும் சீனியர்கள்..சமாதான தூது விடும் எடப்பாடி பழனிசாமி! அவங்க வர்றாங்களா? அதகள அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கவிருக்கும் நிலையில், சசிகலா - ஓபிஎஸ் விவகாரம் குறித்தும் அதில் பேசப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில கொங்கு மண்டல 'மணியான' சீனியர்கள் இதனை எடுத்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் ஆதரவாளர்களை தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாம்..

பெரும் எதிர்பார்ப்புகள் இடையே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி கட்சி ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அந்தக் கூட்டணி பரிதாப தோல்வியை சந்தித்தது.

ADMK executive Council meeting AIADMK Edappadi Palanisami

இதனால் தேர்தலுக்கு முன் அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி யாரும் பேசவில்லை, தவறான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்தது. ஆனால் சசிகலாவை சேர்க்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் சில சீனியர்கள் சொன்னது உண்மைதான் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுக சீனியர்கள்.

அதிமுக ஒரு எக்கு கோட்டை என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது.

ADMK executive Council meeting AIADMK Edappadi Palanisami

இதனால் அதிமுக ஒன்றியணைய வேண்டும், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டு கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவிருக்கும் நிலையில், சசிகலா - ஓபிஎஸ் விவகாரம் அதில் பேசப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில கொங்கு மண்டல 'மணியான' சீனியர்கள் இதனை எடுத்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகியுள்ளது.

தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகள் பேசினால், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் சில தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் இடைத்தேர்தல்களை அவரும் புறக்கணித்திருக்கிறார். எனவே தேர்தல் தோல்வி ஒரு பொருட்டில்லை 2026 சட்டமன்ற தேர்தல் தான் டார்கெட் என எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச திட்டமிட்டுள்ளது. அவசர செயற்குழு கூட்டத்துக்காக நேற்றே பல நிர்வாகிகள் சென்னை சென்ற நிலையில், அவர்களில் சிலரை எடப்பாடி பழனிசாமி தனியே அழைத்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அதில் சசிகலா குறித்தோ, ஓபிஎஸ் குறித்தோ பேசினால் அவர்களை கார்னர் செய்து பேச வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளார் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+