"என்ன பிரச்சினை".. கடிதத்தில் கேட்ட இபிஎஸ்.. ஓபிஎஸ்ஸின் கோரிக்கை நிராகரிப்பு! அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: அதிமுக பொதுக் குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு ஒரு பிரச்சினை இல்லாத போது பொதுக் குழுவை தள்ளி வைக்க முடியாது என ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த தனித்தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி தரப்பு இந்த பொதுக் குழு கூட்டத்தை நல்ல சந்தர்ப்பமாக நினைத்து காத்திருக்கிறது.

முறியடிக்க
இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில்தான் மூத்த முன்னோடிகள் பிரச்சினையை கிளப்பியது. அதாவது நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும் என எனக்கு தொடர்ந்து கடிதங்கள் வருகின்றன.

பொதுக் குழு கூட்டம்
இதனால் பொதுக்குழு கூட்டத்தை தற்போது ஒத்தி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் மூத்த முன்னோடிகளையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கூட்டத்தை நடத்தலாம் என கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றாலும், பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தனர்.

ஓபிஎஸ் தரப்பு
இதனால் ஓபிஎஸ் தரப்பு சட்ட வல்லுநர்களை ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் பொதுக் குழுவை ஒத்தி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போது எதற்காக தள்ளி வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளாராம்.

நிராகரித்த இபிஎஸ்
இந்த கடிதத்தின் அதிகாரப்பூர்வ நகல் கிடைக்கவில்லை. பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமியே கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதால் இனி அடுத்த கட்ட முடிவுகள் என்னவாக இருக்கும், ஓபிஎஸ் தரப்பு எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்!












Click it and Unblock the Notifications