"தர்மயுத்தம்".. "தனியொருவரான" ஓபிஎஸ்.. ஜெயலலிதா நினைவிடம் செல்கிறாரா?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷமிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 9 நாட்களாக அதிமுகவில் சலசலப்பு எழுந்தது.
நாளை பொதுக் குழு கூட்டம், செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக் குழு உறுப்பினர்கள் நிறைவேற்றினால் என்ன செய்வது என்பதால் அந்த கூட்டம் நடக்கக் கூடாது என மூத்த முன்னோடிகள் புறக்கணிப்பு விஷயத்தை முன்னிறுத்தி பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.

எடப்பாடி மறுப்பு
ஆனால் பொதுக்குழுவை தள்ளி வைக்க எந்த அவசியமும் இல்லை என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என பதில் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுக் குழு கூட்டம்
பொதுக் குழு கூட்டம் நடத்த அனுமதித்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என ஆவடி ஆணையரகத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். உள் அரங்கில் நடக்கும் ஒரு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கவோ மறுக்கவோ முடியாது என ஆவடி காவல் துறை பதில் அளித்துவிட்டது.

ஜெயலலிதா சமாதி
இது போதாக்குறைக்கு உடனிருந்த மூத்த நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவிவிட்டார்கள். இந்த நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு ஓபிஎஸ் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவே ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என சொல்லப்பட்டது.

ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறாரா ஓபிஎஸ்
இந்த தகவலால் அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்தார்கள். அவர்களில் சிலர் ஒப்பாரி வைத்து அழுது தீக்குளிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை முதலே ஜெயலலிதா சமாதியில் தொண்டர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. எனவே ஓபிஎஸ் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தர்மயுத்தம் நடத்தியது நினைவுக்கூரத்தக்கது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications