யார் மாமன்னன்? அதிமுகவின் மதுரை மாநாட்டில் 'அந்த' சமூகம் பங்கேற்க தென்மாவட்ட "சங்கம்" அதிரடி தடை?
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தின் வில்லன் பகத் ஃபாசில் காட்சிகளை முன்வைத்து தாறுமாறாக நெட்டிசன்கள் விளையாடும் விளையாட்டு இன்னமும் ஓயவில்லை. இப்போது மாமன்னன் படத்தில் இடம் பெறும் 'சங்கம்' பாணியில் அதிமுக மதுரை மாநாட்டை ஒட்டி சில சம்பவங்கள் தென்மாவட்டங்களில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தலித் சமூகத்தைச் சேர்ந்த மாமன்னன் என்ற வேட்பாளரை வீழ்த்துவதற்காக சொந்த ஜாதி சங்கத்தின் நிர்வாகிகள் காலில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து மன்னிப்பு கேட்பார் வில்லன் ரத்தினவேல்- இது மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடத்த மாமன்னன் படத்தின் ஒரு காட்சி. ரத்தினவேலாக பகத் ஃபாசில் நடித்திருப்பார்.

இதேபோன்ற காட்சிகள்தான் இப்போது அதிமுகவின் மதுரை மாநாட்டை முன்னிட்டு தென்மாவட்டங்களில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் முதல் மாநாடு. ஆகையால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழு வீச்சோடு மாநாட்டுக்கு ஆட்சேர்க்கும் பணியை கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு செய்து வருகின்றனர்.
தேனி ஆர்ப்பாட்டம்: இந்த ஆட்டத்தை கலைக்கும் வகையில் தென்மாவட்டத்தின் மாமன்னன் நானே என கோதாவில் குதித்திருக்கிறாராம் மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் முதல் கட்டமாகத்தான் தேனியில் பரம எதிரியான டிடிவி தினகரனுடன் இணைந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை மாஸ் கூட்டம் காட்டி நடத்தினார் ஓபிஎஸ்.
களத்தில் ஜாதி சங்கம்: அதேநேரத்தில் அதிமுகவின் மாமன்னன் யார் என்ற எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இடையேயான போட்டியில் தென் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய ஜாதி சங்கம் ஒன்று களமிறக்கிவிடப்பட்டிருக்கிறதாம். காலந்தோறும் அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த அந்த சமூகம், முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதில் மிக கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியது. இதனால் தென்மாவட்டங்களில் தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரமே செய்ய முடியாத பரிதாப நிலைமை உருவானது. இந்த 10.5% கோபத்தை இப்போது ஓ.பன்னீர்செல்வம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த ஜாதி சங்கங்களை களமிறக்கிவிட்டிருக்கிறாராம்.
அதிமுக மாநாடு செல்ல தடை?: அதாவது மாமன்னன் படத்தில் திடீரென வடிவேலு ஊர்களில் பிரசாரம் செய்ய முடியாத அளவு சொந்த கட்சியினர் கூட எதிர்க்கும் அளவுக்கு ஜாதி சங்கத்தின் தடை கோரமுகத்தைக் காட்டும். அதே போலதான் இப்போது தென்மாவட்ட ஜாதி சங்கம் ஒன்று ஓ.பன்னீர்செல்வத்துக்காக பல தடைகளை விதித்திருக்கிறதாம். அதில் ஒன்றுதான் எடப்பாடி பழனிசாமி கூட்டும் அதிமுகவின் மதுரை மாநாட்டு யாரும் செல்லக் கூடாது என "சங்கம்" தடை விதித்துள்ளதாம். தென்மாவட்டங்களில் ஆட்சேர்ப்பு ஆலோசனை கூட்டங்களுக்கு போகும் அதிமுக சீனியர்களிடம் இந்த தகவல் அரசல் புரசலாக போட்டு வைக்கப்படுகிறதாம். இதனால் தென்மாவட்ட ஜாதி சங்க முடிவை சமன் செய்ய மேற்கு மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஆட்களை களமிறக்கவும் வியூகம் வகுக்கப்படுகிறது என்கின்றன அதிமுக வட்டார தகவல்கள்! மாமன்னன் திரைப்பட காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் அதிமுகவின் சம்பவங்கள் நடைபெறுவதை பிற கட்சியினர் உன்னிப்பாக ரசித்தும் வருகின்றனராம்!
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications