சுவாரசியம்.. 4 தேர்தல்களிலும் 'வெற்றிகரமான' தோல்வி- தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
சென்னை: லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக களம் காண்கிறார் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். தாம் போட்டியிட்ட 4 தேர்தல்களிலும் இதுவரை 'வெற்றிகரமான' தோல்வியைத் தழுவிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இம்முறை தென் சென்னை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுடன் மோதுகிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்த காலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் சுவாரசியமானதாக இருக்கும். தமது உரத்த குரலில் 'தாமரை மலர்ந்தே தீரும்' என முழக்கமிடுவதும் பாஜகவின் தோல்விகளை 'வெற்றிகரமான தோல்வி' என ஏற்றுக் கொண்டதும் மறக்க முடியாத பேச்சுகள்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். 2006-ம் ஆண்டு முதன் முதலாக ராதாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார் தமிழிசை. அத்தேர்தலில் மொத்தமே 5,343 வாக்குகளைத்தான் தமிழிசை பெற்றார். 5-வது இடம் பெற்ற தமிழிசை பெற்ற மொத்த வாக்கு சதவீதம் 4.70%. 2011 சட்டசபை தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் களம் கண்டார் டாக்டர் தமிழிசை. அத்தொகுதியிலும் வெறும் 7,040 வாக்குகளைத்தான் பெற்றார் தமிழிசை. வேளச்சேரியில் 4.63%
வாக்குகள்தான் தமிழிசைக்குக் கிடைத்தன.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் 2009-ல்தான் முதன் முதலில் களம் கண்டார். வடசென்னை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழிசை 23,350 வாக்குகளைத்தான் பெற்றார். மொத்தம் தமிழிசை பெற்ற வாக்கு சதவீதம் 3.54%.
கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் களத்துக்கு வந்த தமிழிசை தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். தூத்துக்குடி தொகுதியில் கவுரவமாக 2,15,934 வாக்குகள் அதாவது 21.8% வாக்குகளை தமிழிசை சவுந்தராஜன் பெற்றார். தமது தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக டபுள் டிஜிட் வாக்குகளை தூத்துக்குடியில்தான் பெற்றார் தமிழிசை.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. பின்னர் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்பிவிட்டார் தமிழிசை. தென் சென்னை லோக்சபா தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பியான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிராக களம் காண்கிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications