Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியா போச்சு.. தென்மேற்கு பருவமழை தாமதமாகதான் வருமாம்.. இந்திய வானிலை மையம் போட்ட குண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் தாமதமாக கேரளாவில் வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழியும் என்று நல்ல செய்தி சொல்லியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கு இந்த தென்மேற்கு பருவமழை முக்கியமானதாகும். இந்தியாவுக்கு பெருமளவு மழை தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. இந்தியாவின் விவசாய வருமானத்திற்கு இந்த பருவமழையே முக்கிய காரணியாக உள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாத முதல் நாளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இருந்து தொடங்கும்.

South west Monsoon over Kerala to be delayed, likely to be on June 4 says IMD

நாடு முழுவதும் நடப்பாண்டு மிகக்கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் மக்கள் தென்மேற்கு பருவமழையை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெற்கு அந்தமான் கடலில் பருவமழை தொடங்கியுள்ளது. கேரளாவில் மே 27ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி ஜோராக பெய்தது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.

கடந்த 5 ஆண்டு காலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாட்களை பார்த்தால் 2018, 2022ஆம் ஆண்டுகளில் முன்கூட்டியே தொடங்கியது. 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பருவமழை சில நாட்கள் தாமதமாக தொடங்கியது என்றாலும் மழை கொட்டித்தீர்த்தது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். நடப்பாண்டு பருவமழை வரும் ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுவரை வெப்பம் நீடிக்க வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை கிடைக்கிறது. தென் மேற்கு பருவ மழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது. இந்திய மக்களின் வருமானத்தில் பாதியளவு விவசாயம் சார்ந்தே உள்ளது. இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் 50% கோடைகால பயிர்களாகவே உள்ளன. அவை பருவமழையையே சார்ந்திருக்கின்றன.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சில நாட்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டியே பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 1ஆம் தேதி வரை 94 சதவிகிதம் அதிகமாக பெய்திருந்தது.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் சீசனில் எல் நினோவின் 70% நிகழ்தகவு இருப்பதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் பருவத்தில் 80% ஆக உயரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் மாதமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக எல் நினோ காலத்தில் அதிக வறட்சியோ அல்லது அதீத கனமழையோ பெய்யக்கூடும். நடப்பாண்டு பருவமழை இயல்பாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதியமடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+