தென்மேற்கு பருவக்காற்றால் 7 மாவட்டங்களில் மழை - ஜில் நியூஸ் சொன்ன வானிலை மையம்
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூலான தகவலை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். இந்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும். பாபநாசம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். தென் மாவட்டத்தில் உள்ள பல அணைகளில் நீர் மட்டம் உயரும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் சரியாக தொடங்கியது என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது பல பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரத்தால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூலான தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஐந்து மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானாலும் மாலையில் மேகமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஜூன் 23ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மீனவர்கள் 23ஆம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications