“போதைப்பொருள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்" - தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி
மதுரை: போதைப்பொருள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம் என தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவதை தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது என்றும் கந்துவட்டி, மணல்கொள்ளை, பொருளாதார மோசடி குற்றங்களை தீவிரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

21 ஆவது மதுரை தென்மண்டல காவல்துறை ஐ.ஜியாக விஜயேந்திர பிதாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியிலுள்ள தென்மண்டல காவல்துறை ஐஜி அலுவலகத்தில் மதுரை டிஐஜி அபினவ்குமார் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து ஐஜி விஜயேந்திர பிதாரி பேசுகையில், "தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது, குற்றசம்பவங்களை குறைப்பது குறித்து அனைத்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
கந்துவட்டி, போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளை போன்றவற்றை தடுக்க தீவிரமாக பணியாற்ற உள்ளோம். குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து சைபர் கிரைம், பொருளாதார மோசடி போன்ற புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்ள்கள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தினை பயன்படுத்த ஆலோசனை நடத்தவுள்ளோம்.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவல்துறை உயரதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதிகமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படக்கூடிய காவல் நிலையங்களில் குற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து அந்த காவல் நிலையங்களை மாதிரி காவல் நிலையங்களாக மாற்றப்படும். காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது" எனத் தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களை பயன்படுத்தி மோதலை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிடுவோர் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு "இதுபோன்ற சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படக்கூடிய குற்றவாளிகளுடைய சொத்துக்களை மீட்பது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications