சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து.. தாம்பரம் வழித்தடம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வார இறுதியில் மின்சார ரயில்களை பாராமரிப்பினை காரணம் காட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவது பயணிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை விட மின்சார ரயில்களில் தான் மக்கள் அதிகம் பயணிக்கிறார்கள். தினசரி லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்களை பயன்படுத்துகிறார்கள். சென்னையில் நான்கு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஓடுகின்றன. இதில் கடற்கரை தாம்பரம் இடையேயான வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும்.

இந்த வழித்தடத்தில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை மின்சார ரயில்கள் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயங்காவிட்டால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும். அந்த அளவிற்கு மிகவும் முக்கியமான மின்சார ரயில் வழித்தடம் ஆகும்.. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வார இறுதிகளில் பாராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் கணிசமாக ரத்து செய்யப்படுவது பயணிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக தொடர்ந்து 4-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டது" இவ்வாறு தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications