விட்டாச்சு லீவு..சொந்த ஊரில் விடுமுறையை கொண்டாட போறீங்களா...ஸ்பெஷல் ரயில்கள் இருக்கு டோண்ட் ஒர்ரி
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட பலரும் தற்போதே பயணங்களுக்கு திட்டமிட்டு விட்டனர். கோடைக்கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. தென்னக ரயில்வே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வேலைக்காக வெளியூரில் தங்கியிருந்தாலும் பண்டிகையோ விடுமுறையோ சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். பயணங்கள் நெரிசல் இன்றி இனியதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோடைக்கால சிறப்பு ரயில்கள்: தாம்பரம் - நெல்லை இடையே ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும்.
நாகர்கோவில் - தாம்பரம் இடையே ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
https://twitter.com/GMSRailway/status/1649216379223146497
நெல்லை - சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும்.
தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய 5 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.
ரயில் எண் 06044 திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்றடையும். வரும் மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
ரயில் எண் 06043 சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். வரும் மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications