சென்னை டூ நெல்லை.. தென் மாவட்டங்களுக்கு கோடை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. உடனே டிக்கெட்டை போடுங்க
சென்னை: கோடைக்காலப் பயணிகளின் வசதிக்காகவும், அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோடைக்காலத்தில் சுற்றுலா மற்றும் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் அறிக்கப்பட்டுள்ளன. இதற்கான புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில்:
தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்-06018) வரும் ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரவு 11:30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இது மறுநாள் மதியம் 12:30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, (வண்டி எண்-06017) தாம்பரத்திலிருந்து வரும் ஏப்ரல் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மதியம் 3:30 மணிக்குக் புறப்படும் ரயில், மறுநாள் காலை 4:30 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.
சென்னை டூ கன்னியாகுமரி சிறப்பு ரயில்:
சென்னை டூ கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்-06045) சென்னை எழும்பூரிலிருந்து வரும் ஏப்ரல் 22 அன்று இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்குக் கன்னியாகுமரிக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியிலிருந்து ஏப்ரல் 26 அன்று இரவு 11:25 மணிக்குத் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்-06046) அடுத்த நாள் காலை 11:15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் டூ செங்கோட்டை:
தாம்பரத்திலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்குச் சிறப்பு ரயில் (வண்டி எண்-06089) ஏப்ரல் 22-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5:30 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-06090) செங்கோட்டையிலிருந்து ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு 10:30 மணிக்குக் புறப்பட்டு, மறுநாள் காலை 11:30 மணிக்குச் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும்.
சென்ட்ரல் டூ போத்தனூர்:
சென்னை சென்ட்ரல் டூ போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண்-06023) சென்னை சென்ட்ரலிலிருந்து வரும் ஏப்ரல் 22 அன்று பிற்பகல் 3:10 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 11:30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரிலிருந்து ஏப்ரல் 23 அன்று இரவு 11:30 மணிக்குக் கிளம்பும் ரயில் (வண்டி எண்-06024) மறுநாள் காலை 8:20 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மேலும், போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 21, 22, 25, 26 ஆகிய தேதிகளில் காலை 7:40 மணிக்குச் சிறப்பு ரயில் (வண்டி எண்-06028) இயக்கப்பட்டு, அதே நாள் மாலை 5 மணிக்குச் சென்ட்ரலை வந்தடையும். சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து அதே தேதிகளில் மாலை 6:35 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்-06027) மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications