பாண்டியன் , ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்.. மேல்மருவத்தூரில் நின்று செல்ல போகும் 48 ரயில்கள்.. முழு விவரம்
சென்னை: இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முக்கியமான 48 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை-மன்னார்குடி ரயில். சென்னை- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் அந்தியோதியா ரயில், காரைக்குடி உழவன் ரயில் உள்பட பல ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண்12653), திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12654), சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16179), மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16180) வரும் 14-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12638), செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12662), நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயிலும் (20692), கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16102), தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16866), காரைக்குடியில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16176) வரும் 14-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12637), சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12661), தாம்பரத்தில் இருந்த நாகர்கோவில் செல்லும் அந்தியோதியா அதிவிரைவு ரயிலும் (20691), சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16101), சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16865), தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயிலும் (22657), வரும் 15-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரயில் (22624) வரும் 14-ந்தேதி முதல் பிப்ரவரி 8-ந்தேதி வரையும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் (20682) வரும் 14-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேி வரையும், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அதிவிரைவு ரயில் (20683) வரும் 15-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரையும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரயில் (20684) வரும் 16-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் அதிவிரைவு ரயில் (22658) வரும் 16-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் (12667) வரும் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரையும், எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் அதிவிரைவு ரயில் (22623) வரும் 15-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரயில் (12668) வரும் 20-ந்தேதி முதல் பிப்ரவரி 7-ந்தேதி வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
இதேபோல தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கும் என 24 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications