ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. திருச்சி வழியாகப் போறீங்களா? தெற்கு ரயில்வே கொடுத்த அட்வைஸ்!
திருச்சி: தமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் மையப்புள்ளியாக திருச்சி விளங்குகிறது. இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை அதற்கேற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணமே பயணிகளின் முக்கிய தேர்வாக இருக்கிறது.
பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தினம் தோறும் இயக்கப்படுகிறது.

இதே போல சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி மற்றும் பிற காரணங்கள் காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை அதற்கேற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேவை மாற்றங்கள்:
*திருச்சி - காரைக்கால் டெமு ரெயில் (76820): காலை 8.35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், ஆகஸ்ட் 4 முதல் 10 வரை திருச்சி - திருவாரூர் இடையே மட்டுமே இயங்கும்.
*ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (56106): காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், ஆகஸ்ட் 5 மற்றும் 9 தேதிகளில் ஈரோடு - திருச்சி கோட்டை வரை மட்டுமே இயங்கும்.
*காரைக்குடி - திருச்சி பயணிகள் ரெயில் (56832): காலை 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், ஆகஸ்ட் 5 மற்றும் 19 தேதிகளில் காரைக்குடி - குமாரமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
*காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (76819): ஆகஸ்ட் 4 முதல் 10 வரை திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும்.
*திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843): ஆகஸ்ட் 5 மற்றும் 19 தேதிகளில் திருச்சி கோட்டை நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்படும்.
*திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (16849): ஆகஸ்ட் 11 முதல் 14 வரை திருச்சி - மானாமதுரை இடையே மட்டுமே இயங்கும்.
*ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் (16850): ஆகஸ்ட் 11 முதல் 14 வரை ராமேசுவரம் - மானாமதுரை இடையே சேவை ரத்து செய்யப்படும். மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
மாற்றுப்பாதை சேவை:
மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: மதியம் 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரெயில், ஆகஸ்ட் 10 மற்றும் 13 தேதிகளில் வழக்கமான பாதையில் இயங்காமல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு செல்லும். ரெயில்வே பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications