தென்னக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! நேரம் மாற்றி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்! வெளியான லிஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் சில முக்கிய விரைவு ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்,சேது எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 7 ரயில்கள் அடங்கியுள்ளன. இந்த ரயில்கள் 10 முதல் 30 நிமிட இடைப்பட்ட அளவில் முன் அல்லது பின் புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள்து.
இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் பயண வசதிக்காக தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. இதற்காக தெற்கு ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணையை வெளியிடுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு அட்டவணை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சில ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய தகவல்படி, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தற்போதைய மதியம் 2.45க்கு பதிலாக மதியம் 2.35க்கு புறப்படும்.

அதேபோல் தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில் மாலை 5.27க்கு பதிலாக மாலை 5.15க்கு புறப்படும். எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் இப்போது மதியம் 1.45க்கு பதிலாக மதியம் 1.15க்கு இயக்கப்படும். அதே நேரத்தில், எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் இதுவரை இரவு 7.30க்கு புறப்பட்டு வந்தது. இப்போது அது இரவு 7.15க்கு புறப்படுகிறது. எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இது இரவு 8.10க்கு பதிலாக இரவு 7.35க்கு புறப்படும். எழும்பூர் - ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் இதுவரை மாலை 5.45க்கு புறப்பட்டு வந்தது. இது இனி மாலை 5.55க்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல், திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக செல்லும் நிலையை குறைக்கவும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மின்மயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. புதிய சிக்னல் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயண நேரம் குறைய வாய்ப்பு உள்ளது எனவும், இதனால் தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த புதிய அட்டவணையால், குறிப்பாக, சென்னை - கோவை மற்றும் சென்னை - மதுரை - கன்னியாகுமரி வழித்தடங்களில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் தங்கள் பயண திட்டங்களை புதிய அட்டவணைப்படி திட்டமிட வேண்டும் என்றும் ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 1 முதல் பழைய நேர அட்டவணை ரத்து செய்யப்படும். புதிய அட்டவணை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் தெற்கு ரயில்வே திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், ஐஆர்சிடிசியின் முன்பதிவு இணையதளத்திலு இந்த புதிய அட்டவணை அப்டேட் செய்யப்படும் என ரயில்வே கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications