ரயில் பயணிகளுக்கு செம நியூஸ்.. சென்னை - நெல்லை உட்பட 6 சிறப்பு ரயில்கள் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு!
சென்னை: திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 22 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இதேபோல, மொத்தம் 6 சிறப்பு ரயில்களை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி செல்லும். மறு மார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரும்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி ஒரு பெட்டியும், மூன்றடுக்கு ஏசி 6 பெட்டியும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 7, முன்பதிவு செய்யப்படாத பெட்டி 4 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். வேளாங்கண்ணி - எழும்பூருக்கு வாரந்தோறும் சனி, திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 24 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில் 14 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாகவும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - ராமநாதபுரத்துக்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரத்துக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 30 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், மூன்றடுக்கு ஏசி 3, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 6, முன்பதிவு செய்யப்படாத பெட்டி 7 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி இருப்பதாகவும் தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications