ரத்தான வந்தே பாரத் ரயில்..தென்னக மக்களுக்கு வந்த ஷாக் செய்தி.! இந்த தேதிகள் ரொம்ப முக்கியம் மக்களே.!
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனவும், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் , சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் 3வது மிகப் பெரிய ரயில்வே முனையமான தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணியின் காரணமாக அந்தியோதயா முன்பதிவு இல்லாத ரயில் சேவை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரையிலான சேவையும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தென் மாவட்ட பயணிகள் அதிகாலையில் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் போது செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கம் அல்லது எழும்பூர் வரை மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"
*ஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
*ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ஆகிய ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
*ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் இயக்கப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
*ஆகஸ்ட் 14 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12641) விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.” என கூறப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications