பயணிகளுக்கு ஹேப்பியான அப்டேட்..கூட்ட நெரிசலை தவிர்க்க..அக்டோபர் முதல் புறநகர் ரயிலில் வரும் மாற்றம்
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களே இயக்கப்படுகின்றன.
சென்னை: குறைந்த செலவில், விரைவாக சென்னைக்கு வந்து செல்ல மின்சார ரெயில்கள் மிகவும் பயனுள்ளதாக மின்சார ரயில்கள் உள்ளது. சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் பற்றி தனியாக சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. காலை முதல் இரவு வரை சென்னையின் அனைத்து முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் எறும்புகள் போல சாரை சரையாக செல்வதைக் காண முடியும்.
அதுவும் பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை 8 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். தினமும் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று விட்டாலே பெரிய சாதனைதான் என்று பெருமைப்படும் அளவுக்குதான் சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ளது என்று சொன்னால் மிகையல்ல.

குறைந்த செலவில் விரைவாக செல்ல
இப்படி கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் ரயில்கள்தான். பயணக்கட்டணமும் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களுடன் ஒப்பிடும் போது பெருமளவு குறைவு. இதனால், தினசரி கூலி வேலை செய்பவர்கள் ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மின்சார ரயில்களில் பயணிப்பதை காண முடியும். குறைந்த செலவில், விரைவாக சென்னைக்கு வந்து செல்ல மின்சார ரெயில்கள் மிகவும் பயனுள்ளதாக மின்சார ரயில்கள் உள்ளது.

கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் ஒரளவு கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க முடிகிறது.

9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்
வேளச்சேரி பறக்கு ரயிலை பொறுத்தவரை 9 பெட்டிகள் கொண்ட ரயில்களே இயக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த வழித்தடத்தில் பிற மின்சார ரயில் வழித்தடங்களோடு ஒப்பிடும் போது பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களிலும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களே இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் நாள்தோறும் சுமார் 8 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதனால், எப்போதும் இந்த வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

ரயில்களின் பெட்டியை 12 ஆக அதிகரிக்க
வார நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயிலை நம்பியே இருப்பதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் நிலைதான் காலை மாற்றும் மாலை நேரங்களில் காண முடியும். இதனால், பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்சார ரயில்களின் பெட்டியை 12 ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் ஐசிஎப் தொழிற்சாலையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களின் கட்டமைப்பு வசதிக்கு ஏற்றவாறு புதிய பெட்டிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

நடைமேடைகளின் நீளமும்
இந்த ரயில்களில் புதிய பெட்டிகளை இணைக்கும் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பெட்டிகளை கூடுதலாக இணைக்கும் போது நடைமேடைகளின் நீளமும் அதற்கேற்றவாறு இருக்க வேண்டும் என்பதால் நடைமேடைகள் நீட்டிப்பு மற்றும் பயணிகள் இருப்பதற்கான வசதிபோன்றவற்றையும் மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கூட்ட நெரிசல் இன்றி பயணிக்கலாம் என்பதால் பயணிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications