சென்னையில் 'சிக்சர்' அடித்த தெற்கு ரயில்வே.. எழும்பூரில் நாளை முதல் எல்லாமே மாறுது.. குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக ரயில்வே மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. சொன்ன சொல் தவறுவார்கள்.. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க மாட்டார்கள் என்று கூறுவார்கள். ஆனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரயில் சேவைகள், திட்டமிட்டதை விட இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, நாளை (ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்து தெற்கு ரயில்வே அசத்தி உள்ளது. சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைச்சாமி என்பது போல் நடந்த இந்த மாற்றம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கியது. எந்த மாற்று வழியும் இல்லாததால், ஏப்ரல் 5-ம் தேதி வரை 'லைன் பிளாக்' அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பயணிகள் கடும் அவதிப்பட்டார்கள். இந்நிலையில் மக்களின் சிரமத்தை உணர்ந்த ரயில்வேயின் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அதிரடி வேகத்தால், பணிகள் அனைத்தும் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஏப்ரல் 5-ம் தேதி தொடங்க வேண்டிய ரயில் சேவைகள் ஏப்ரல் 3-ம் தேதியே (வெள்ளிக்கிழமை அதிகாலை 00:00 மணி முதல்) பயன்பாட்டிற்கு வருகிறது.

Electric Train Services

எனவே பிப்ரவரி 27 முதல் அமலில் இருந்த தற்காலிக ரயில் கால அட்டவணை முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பழைய கால அட்டவணை மீண்டும் நடைமுறைக்கு வரும். இனி மேல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - அரக்கோணம் வழித்தடங்களில் தங்குதடையின்றி சீரான மின்சார ரயில் சேவை இனி கிடைக்கும். பணிகள் காரணமாக எழும்பூர் வரை வராமல் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருந்த 44-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இனி எழும்பூர் வழியாக பழையபடி இயங்கும்.

பயணிகள் கவனத்திற்கு: நாளை (03.04.2026) வெள்ளிக்கிழமை முதல் வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான வழக்கமான கால அட்டவணையைப் பயணிகள் பின்பற்றலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்து, கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைத்த ரயில்வே ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+