சென்னை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை.. தெற்கு ரயில்வே மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில் சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இரு மார்க்கத்திலும் 10 மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.59 மணிக்கும் தாம்பரம் வரை இயக்கப்படும்.
சென்னையில் மின்சார ரயில் சேவைகள் பொதுமக்களின் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. இதில் சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் சுமார் 100 வருடங்களாக மின்சார ரயில் சேவை நடந்து வருகிறது. இந்த ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளை தெற்கு ரயில்வே அடிக்கடி மேற்கொண்டு வருகிறது. அதற்காக மின்சா ரயில் சேவைகளை குறைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில் சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.59 மணிக்கும் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 10 நிமிடம் முதல் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதே போல, தாம்பரத்தில் இருந்து முதல் ரயில் 3.55 மணிக்கும், கடைசி ரயில் 11.59 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களும் 10 முதல் 15 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.45 மணிக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 20 நிமிடம் முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதே போல, செங்கல்பட்டில் இருந்து முதல் ரயில் அதிகாலை 4 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11 மணிக்கும் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களும் 20 நிமிடம் முதல் 30 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும். அந்த வகையில், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே வார நாட்களில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அட்டவணைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 10 மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
ரயில்வே வரலாற்றில் ரூ.100 கோடி மெகா அசுர வருவாய்! வியக்க வைத்த கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications