Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. குமரி டூ சென்னை ரூட்டிலா? தென் மாவட்ட பயணிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதன் முதலாக படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் அசாமின் கவுகாத்தி - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா இடையே இயக்கப்பட உள்ளது. 2-வது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூர் டூ குமரி இடையே இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

southern-railway-may-operate-sleeper-vande-bharat-train-between-chennai-egmore-and-kanyakumari

வந்தே பாரத் ரயில்

தமிழகத்தில் சென்னை எழும்பூர் - நெல்லை உள்ளிட்ட 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதி கொண்டதாக இருப்பதால் பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.

எனவே, இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் அசாமின் கவுகாத்தி - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா இடையே இயக்கப்பட உள்ளது. இதேபோல, படுக்கை வசதி கொண்ட 2-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்து தற்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே

இந்த ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, அடுத்ததாக தயாரிக்கப்படும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை தெற்கு ரயில்வே கேட்டுப்பெற ஆலோசித்து வருகிறது. அவ்வாறு பெறப்படும் வந்தே பாரத் ரயிலை சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்க தெற்கு ரயில்வே ஆலோசித்து வருகிறது.

சுற்றுதலாத் தளமான கன்னியாகுமரி செல்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தென் மாவட்டங்களுக்கு அதிகளவிலான பயணிகள் செல்வதால் இந்த ரயில் மிகுந்த வரவேற்பை பெரும் என ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்தனர். சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி என்றால், திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட நகரங்கள் வழியாக இயக்கப்படும்.

பயணிகள் மகிழ்ச்சி

இந்த ரூட்டில் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து செய்கிறார்கள். எனவே, சென்னை - கன்னியாகுமரி ரூட்டில் வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பயணிகளுக்கு இந்த அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வந்தே பாரத் படுக்கை ரயிலில் உள்ள வசதிகள்

* வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மென்மையான மெத்தைகளில் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுளன.
* இதேபோல் நாம் மேல் படுக்கைக்கு செல்வதற்காக எளிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* இரவு நேரத்திற்கு ஏற்ற மென்மையான ஒளி அமைப்பு ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

* வந்தே பாரத் படுக்கை ரயிலில் முழுமையாக மூடி சீல் செய்யப்பட்ட காங்க்வே மற்றும் தானியங்கி கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* இதனால் ரயிலுக்குள் காற்றின் தரமும், வெப்பநிலையும் எப்போதும் ஒரே நிலையில் பராமரிக்கப்படும்.

* பயணியின் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை உறுதி செய்யும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* ரயிலில் டிஜிட்டல் திரைகளுடன் இணைக்கப்பட்ட தகவல் அறிவிப்பு அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு கேமிரா, அவசர நேரத்தில் நேரடியாக லோகோ பைலட்டுடன் தொடர்பு கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளன
* ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட சார்ஜிங் பாயிண்ட், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+