ரிசர்வ் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் இவங்களுக்கு இனி ரூ.1000 அபராதம்! மீண்டும் ரயில்வே அறிவிப்பு
சென்னை: ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே நிர்வாகம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல சலுகைகளை அறிவித்து வருகிறது.. ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அது தொடர்பான அறிவிப்புகளும் பயணிகளுக்கு நிம்மதியை தந்து வருகின்றன. அதேபோல பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது.. இதற்கான தீவிர நடவடிக்கைகளில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இது பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
ரயில்வே நிர்வாகத்துக்கு பல்வேறு வழிகளில், ஏராளமான பண இழப்புகள் ஏற்பட்டு, செலவை சமாளிக்க முடியாமலும் திணறி வருகிறது.. ரெயில் பயணிகளின் நன்மையை கருத்தில் கொண்டு, அதற்கான முக்கியத்துவத்தை தந்து வருவதுடன் செலவையும் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம்
அந்தவகையில் 4 நாட்களுக்கு முன்புகூட ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதாவது ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு போன்றவை எல்லாம் அதே எண்ணிக்கையில் இருக்கிறதா? என்று ரெயில் கடைசியாக வந்து சேரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு கண்காணிக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மற்றொரு அதிரடியை ரயில்வே எடுத்துள்ளது.. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்..
இதற்காகத்தான், தொடர்விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு முன்பாகவே ரிசவேஷன் முறையை செயல்படுத்தி வருகிறது.. அத்துடன், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டும் வருகின்றன.
தெற்கு ரயில்வே - டிக்கெட்
எனினும் சில பயணிகள், டிக்கெட் எடுக்காமல் ரயில்களில் பயணம் செய்துவிடுகிறார்கள்.. அதேபோல உரிய டிக்கெட் இல்லாமல், சாதாரண டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறி உட்கார்ந்து விடுகிறார்கள்.. இதனால் ஏற்கனவே ரிசர்வ் செய்தவர்களுக்கு இடம் கிடைக்காமல் சிக்கலாகிவிடுகிறது. அதுமட்டுமல்ல, டிக்கெட் ரிசர்வ் செய்தும்கூட, ரயிலில் நின்றுகொண்டே பயணிக்கும் நிலைமையும் வந்துவிடுகிறது.
விரைவில் ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறை வரஉள்ளது. பொதுமக்கள் இந்த பண்டிகைகளை கொண்டாடுவதற்கு பயணிகளுக்கு வசதியாக, 6 சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில்கள் செல்லும்.
நிலையில், ரிசர்வ் செய்து பயணிக்கும் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத நிலையில், இதற்கெல்லாம் முடிவு கட்ட ரயில்வே முடிவு செய்துள்ளது.. அதன்படி, டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு சோதனைகள் நடத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காகவே 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறதாம்..
இந்த ஒவ்வொரு குழுவிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இடம் பெற்றிருப்பார்கள்.. இவர்கள், முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு1000 ரூபாய் வரை அபராதமும் விதிக்க போகிறார்களாம்..
தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அதிலும் நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே ரிசர்வ் செய்து பயணிப்போருக்கு மிகுந்த நம்பிக்கையையும் தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications